கோட்டா சீனிவாச ராவ் மரணம் குறித்து மோசமாக பேசிய சிரஞ்சீவியின் தம்பி.. இது எப்போ நடந்துச்சு!
ஹைதராபாத்: இயக்குநர் ஹரி இயக்கிய சாமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கோட்டா சீனிவாச ராவ், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வயது மூப்பு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார். சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உடல்நலக்குறைவால் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கோட்டா சீனிவாச ராவ் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணின் தம்பியான நாகபாபுவை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக நாக பாபு சீனிவாச ராவ் குறித்து மோசமாக விமர்சித்ததற்காகவே அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். நாக பாபு, சீனிவாச ராவின் வயது மற்றும் மரணம் குறித்து கேவலமாக விமர்சித்ததற்கு கோட்டா சீனிவாச ராவ் பதிலடி கொடுத்திருந்தார்.

தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த கோட்டா சீனிவாச ராவை, இயக்குநர் ஹரி தான் இயக்கிய சாமி படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அவரை அழைத்து வந்தார். பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.சாமி படத்தின் வெற்றி கோட்டா சீனிவாச ராவை கோலிவுட்டிலும் பிஸியாக்கியது. பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் சனியன் சகடை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாமி படத்தில் எப்படி ஸ்கோர் செய்தாரோ, அதேபோல் திருப்பாச்சியிலும் ஸ்கோர் செய்தார். தொடர்ந்து கோ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். அவரது வில்லத்தனத்திற்கு அவரது மிகப்பெரிய கண்கள் பலம் சேர்த்தது என்று தான் கூறவேண்டும்.
உடல் நிலை: சமீப காலமாக கோட்டா சீனிவாச ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சமீபத்தில் அவர் தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியானது. அதில், ஆளே அடையாளம் தெரியாமல், கால்களில் கட்டு போட்டபடி அவர் அமர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

மோசமான பேச்சு: அதாவது, கோட்டா சீனிவாச ராவ்க்கு வயதாகிவிட்டது. அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு வாழ்வார் என்று யாருக்குத் தெரியும் என்று மோசமாக விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " நாக பாபு என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியாது. நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணின் தம்பி என்று கூறினால் தான் மக்களுத் தெரியும். அவ்வளவுதான் அவர் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











