எவ்வளவு கஷ்டப்படுறேன்.. விஜய்யை பார்த்து தலையில அடிச்சிக்குவாரு எஸ்.ஏ.சி.. நடிகர் சொன்ன சீக்ரெட்
சென்னை: சினிமாவில் பிஸியாக நடித்துவந்த விஜய் இப்போது அரசியல் களத்திலும் சுழன்றுவருகிறார். அறிக்கைகள் விடுவது, கட்சி கூட்டங்களில் கலந்துகொள்வது என பரபரவென இருக்கும் அவர்; மறுபக்கம் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் படமானது அடுத்த வருடம் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்புடன் இருக்கக்கூடியவை. அவர் கடைசியாக நடித்த நான்கு படங்களுமே உலக அளவில் 200 கோடி ரூபாய்வரை சம்பாதித்திருப்பதாக அவரது தரப்பினர் சொல்வார்கள். அதேசமயம் வாரிசு படம் படுதோல்வியை சந்தித்து நஷ்டத்தைத்தான் கொடுத்தது என்ற ஒரு பேச்சும் அடிக்கடி ஓடுவதுண்டு.
தமிழக வெற்றிக் கழகம்: அதேசமயம் விஜய்க்கு சம்பளமாக 150 கோடி ரூபாய்வரை கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். அவரது அரசியல் வருகை ஆதரவையும், விமர்சனத்தையும் ஒருசேர பெற்றிருக்கிறது. விஜய்யோ தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டிலேயே தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவை விமர்சிக்க தொடங்கிவிட்டார். நாட்கள் செல்ல செல்ல அது குறையும் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் விஜய் தொடர்ந்து அட்டாக் செய்துவருகிறார்.

ஜன நாயகன்: முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் முடிவுக்கு வந்தார் அவர். அதன்படி ஹெச்.வினோத் இயக்கிவரும் ஜன நாயகன்தான் கடைசி படம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அடுத்த வருடம் பொங்கலையொட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவும் செய்கிறது.
தந்தையுடன் மோதல், சேர்தல்: இதற்கிடையே விஜய்யின் தந்தைக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்ததுண்டு. ஒருமுறை நீதிமன்றத்துக்குக்கூட சென்றார் விஜய். சந்திரசேகரும் ஒரு பேட்டியில் எல்லா தந்தை - மகன் உறவில் வருவதுபோல்தான் எங்களுக்குள்ளும் வந்தது என்றும் கூறியிருந்தார். அதேசமயம் சில காலம் கழித்து அவர்களது கருத்து மோதல் சுமூகமாக போனது. இதனால் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு எல்லாம் சந்திரசேகர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொன்னம்பலம் பேட்டி: இந்நிலையில் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திர்சேகர் குறித்து பொன்னம்பலம் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், "விஜய் இந்த சினிமாவுக்கு மொத்தமாகவே அன் ஃபிட் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை பார்த்து தலையால் அடித்துக்கொள்வார். உன்னை நம்பி நிறைய் கடன் வாங்கிவிட்டேன். கஷ்டப்படுகிறேன். ஒழுங்காக நடி என்றுதான் சொல்வார். சில சமயங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கவும் செய்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











