விஜயகாந்த் என் செருப்பை கழுவ வேண்டும்.. பெரிய மீட்டிங் நடந்துச்சு.. நடிகர் சொன்ன செம சீக்ரெட்
சென்னை: விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை ஒட்டுமொத்த தமிழர்களும் தங்களது வீட்டு இழப்பாகவே பார்த்தார்கள். மாநிலம் முழுவதுமிலிருந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தவசி படத்தில் நடிகரின் செருப்பை விஜயகாந்த் கழுவுவது போன்ற காட்சிக்காக மீட்டிங் நடந்தது தெரியவந்திருக்கிறது.
விஜயகாந்த்துக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் எக்கச்சக்கம். அவர் திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் சில கஷ்டங்களை அவர் சந்தித்தாலும் விடாமுயற்சியோடு செயலாற்றி தனக்கான தனி இடத்தை பிடித்திருந்தார். ரஜினி, கமலைவிடவும் கிராமங்களில் அதிக ரசிகர்க்ளை கொண்டிருந்தார் விஜயகாந்த். அவரை பார்த்தாலே நம்ம வீட்டு பிள்ளை என்ற ஃபீல் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவினா அது விஜிதான்: உதவிகள் என்றாலே விஜயகாந்த் என்றுதான் சொல்ல வேண்டும். திரைத்துறையினர், ரசிகர்கள், சாமானியர்கள் என அத்தனை தரப்பினருக்கும் அவரது உதவி கரங்கள் நீண்டிருக்கின்றன. விஜய், சூர்யா திரைத்துறையில் தத்தளித்து கொண்டிருந்தபோது தனது புகழ் படகை அவர்களுக்கு கொடுத்து கரை சேர்த்தவர். அவர்கள் மட்டுமின்றி மறைமுகமாக இன்னும் பல நடிகர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

அரசியலில் விஜயகாந்த்: அரசியலுக்கும் எந்த அச்சமும் இல்லாமல் வந்து; கருணாநிதி, ஜெயலலிதாவை முதல் தேர்தலில் எதிர்த்தார். எதிர்த்ததோடு மட்டுமின்றி அந்தத் தேர்தலில் தனது வாக்கு வாங்கியை நிரூபித்தார். இதனால் அடுத்த தேர்தலுக்கு விஜயகாந்த்தை கூட்டணியில் வைத்திருந்தால் வெற்றி என்ற நிலைமை உருவானது. அதற்கான காய்களை ஜெயலலிதா சரியாக நகர்த்தி தனது பக்கம் இழுத்துக்கொண்டார். விஜயகாந்த்தும் வெற்றி பெற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக மாறினார்.
உயிரிழந்த கேப்டன்: ஆனால் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் முட்டிக்கொண்டது. பிறகு தேமுதிகவிலிருந்து எம்.எல்.ஏக்கள் விலக ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து காணாமல் போனார் விஜயகாந்த். ரொம்பவே நம்பியவர்கள் செய்த துரோகத்தை தாங்காத அவருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினார். சூழல் இப்படி இருக்க கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
பொன்னம்பலம் பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த் குறித்து நடிகர் பொன்னம்பலம் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "தவசி படத்தில் எனது செருப்பை விஜயகாந்த் கழுவுவது போன்ற காட்சி இருந்தது. அந்த கேரக்டருக்கு எந்த நடிகரை போடலாம் என்று டிஸ்கஷன் செய்து என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மேலும் அந்தக் காட்சி தொடர்பாக விஜயகாந்த்தின் ரசிகர் மன்றங்கள் எல்லாம் அவரை சந்தித்து மீட்டிங் போட்டிருக்கிறார்கள். இப்படி நான் கேள்விப்பட்டதே இல்லை. அவரும் என்னிடம், 'ஆமா பொன்னம்பலம் இந்த முடிவை நான் எடுக்கல. ரசிகர் மன்றங்கள் எல்லாம் மீட்டிங் போட்டாங்க. அவங்க சொல்றது உண்மைதான்' என சொன்னதாக கூறினார் பொன்னம்பலம்.


Click it and Unblock the Notifications











