நயன்தாரா ஒரு பெண்ணா?.. எங்கே பார்த்தாலும் அடிப்பேன்.. பிரபுதேவா Ex மனைவி எப்போ சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாரா முதலில் சிம்புவை காதலித்தார். அந்தக் காதல் முறிவுக்கு பிறகு நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவா ஏற்கனவே ரமலத் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் நயனுடன் அவர் காதலில் இருந்த விவகாரம் அந்த சமயத்தில் கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது. சூழல் இப்படி இருக்க அந்தக் காதலும் முறிந்து நயன் இப்போது விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

ஐயா படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நயன்தாரா. அதனையடுத்து ரஜினி, சிம்பு உள்ளிட்டோருடன் நடித்தார். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் காதல் ஏற்பட்டது. இரண்டு பேரும் ஜோடியாக வலம் வந்தார்கள். மேலும் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் அந்தக் காதல் பாதியில் முடிந்தது. அதற்கான காரணம் குறித்து இரண்டு பேருமே வெளியில் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.

throwback stories nayanthara prabhu deva

பிரபுதேவாவுடன் காதல்: சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. மேலும் இரண்டு மகன்களும் இருந்தார்கள். இருந்தாலும் நயனும், பிரபுவும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். பிரபுதேவாவுக்காக நயன்தாரா கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறினார்; சினிமாவிலிருந்தும் முழுவதுமாக விலகினார். எனவே கண்டிப்பாக இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றே கருதப்பட்டது.

இந்தக் காதலும் முறிவு: ஆனால் இந்தக் காதலும் பாதியில் முடிந்தது. அதனையடுத்து சில காலம் கழித்து சினிமாவில் நடிக்க வந்த நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டார். நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த அவர்; இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்கும் உயிர், உலக் என்ற மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன்தாரா.

ரமலத் பேட்டி: இந்நிலையில் நயனும், பிரபுதேவாவும் காதலித்தபோது பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய ரமலத், "எனது கணவர் பிரபுதேவா நயன்தாராவை காதலிக்கிறார் என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை என்பதுதான் உண்மை. அவர் ஒரு சிறந்த கணவர். எங்களை 15 ஆண்டுகளாக மிகவும் நன்றாக பார்த்துக்கொள்கிறார்.

எங்கே பார்த்தாலும் அடிப்பேன்: அவர் எங்களுக்கு அண்மையில்தான் வீடு வாங்கிக்கொடுத்தார். ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது. எனது கணவர் நடந்துகொள்ளும்விதம் அதிர்ச்சியளிக்கிறது. அடுத்த பெண்ணின் கணவரை திருடுபவர்தான் நயன்தாரா. அவரை நான் எங்கேயாவது பார்த்தால் நிச்சயமாக அடிப்பேன். ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அவர்தான் மிகச்சிறந்த உதாரணம்" என்றார். இந்தப் பேட்டி சில வருடங்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நயனை பிரிந்த பிரபுதேவா இன்னொரு பெண்ணை திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X