விஜய்யுடன் ஆட மறுத்த பிரபுதேவா.. எப்படியோ பேசி மனதை மாற்றிய காமெடி நடிகர்.. இது போக்கிரி சம்பவம்

சென்னை: பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த முதல் திரைப்படம் போக்கிரி. கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக விஜய்யின் கமர்ஷியல் வேல்யூவை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திய படமும் அதுவே. அந்த வெற்றி கொடுத்த தெம்பால்தான் பிரபுதேவாவுடன் இணைந்து வில்லு படத்தில் பணியாற்றினார். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்துவிட்டது.

நடன இயக்குநர், நடிகராக ஜொலித்துக்கொண்டிருந்த பிரபுதேவா தெலுங்கில் சித்தார்த் - திரிஷாவை வைத்து ஒரு படம் இயக்கி வெற்றியை பார்த்துவிட்டார். இருப்பினும் தமிழில் இயக்குநராகும் முயற்சியை தீவிரமாக எடுக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால் போக்கிரி படத்தை இயக்கி இயக்குநராக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

படம் மெகா ப்ளாக் பஸ்டர்: இப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக்காக உருவாகியது. படத்தில் ஒரு ஹீரோவுக்கு தேவையான ஆக்‌ஷன், ரொமான்ட்டிக் என அத்தனையும் அமைந்திருந்ததால் விஜய்க்கும் இது பெரிய கிஃப்ட்டாக அமைந்தது. ஒவ்வொரு சீனையும் பட்டாசாக பிரபு செதுக்க; விஜய்யும் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தை மெகா ப்ளாக் பஸ்டர் ஆக்கிவிட்டார்கள்.

Prabhu Deva First Refused to Dance With Vijay in Pokkiri Movie Here are Throwback incident
Photo Credit:

அத்தனையும் சிறப்பு: படம் வெற்றியடைய இசை, திரைக்கதை, கதை, காமெடி உள்ளிட்டவைகளில் ஏதேனும் இரண்டு ஒர்க் அவுட் ஆனாலே போதும். ஆனால் போக்கிரி படத்தில் அவை அத்தனையும் ஒர்க் அவுட் ஆனது. அதிலும் மணி ஷர்மாவின் இசை படத்துக்கு புதுமையாக இருந்தது மட்டுமின்றி விஜய்யின் ரசிகர்களை தியேட்டரில் அமர விடாமல் ஆட வைத்துக்கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கிரி பொங்கல்: அதுவும் படத்தின் ஓபனிங் பாடலான 'ஆடுங்கடா என்னை சுத்தி' பாடல் இப்போதும் விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான பாடல்தான். இசை ஒருபக்கம் பட்டையை கிளப்ப; மறுபக்கம் கபிலன் இந்தப் பாடலில் எழுதியிருந்த வரிகள் சமூகத்துக்கு தேவையானதாகவும்; சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்பும்படியும் அமைந்திருந்தன. போதாக்குறைக்கு விஜய்யும், பிரபுதேவாவின் நடனம் வேறு. சிறப்பாக நடனம் ஆடும் இரண்டு பேரையும் ஒரே ஃப்ரேமில் பார்த்தது கண் கொள்ளா காட்சி.

பின்னணியில் நடந்தது: ஆனால் இந்தப் பாடலில் விஜய்யுடன் நடனம் ஆடுவதற்கு பிரபுதேவா முதலில் மறுத்திருக்கிறார். அதாவது, பிரபுதேவாவுடன் எப்படியாவது நடனம் ஆடிவிட வேண்டும் என்று விஜய்க்கு ஆசையாம். அதை அவரிடம் நேரடியாக சொல்லாமல் வையாபுரியிடம் சொல்லியிருக்கிறார். மாஸ்டருக்கு வையாபுரி கொஞ்சம் நெருக்கம் என்பதால் அவரும், ஸ்ரீமனும் முதலில் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு பிரபுதேவாவோ, 'ம்ஹும் வேண்டாம். பாடல் நடனத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வோம். ஆனால் நான் அவருடன் தோன்ற வேண்டாம்' என மறுத்துவிட்டாராம். இருந்தாலும் விடாத அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து நச்சரித்து கடைசியில் ஒத்துக்கொள்ள வைத்தார்களாம். இதனை வையாபுரி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X