நயன்தாரா அப்படி கிடையாது.. எப்படி இருப்பாங்க தெரியுமா?.. பிரபுதேவா ஓபனாவே சொல்லிருக்காரே ப்பா

சென்னை: நடிகை நயன்தாரா அவரது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். ஆனால் சமீபத்தில் அவர் அளித்த ஒரு அறிக்கையில் யாரும் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தில் கமிட்டாகியிருக்கும் அவர்; இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே பிரபுதேவா, சிம்பு ஆகியோருடனும் காதலில் இருந்தார் நயன்.

கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியடைந்திருப்பவர் நயன்தாரா. ஐயா படத்தில் அறிமுகமாகி இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நயனுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட கிளாமர் ரோல்களைத்தான் ஆரம்பத்தில் செய்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட சமயத்தில்தான் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. ஆனால் அந்தக் காதல் பாதியில் முடிந்தது.

அடுத்த காதல்: சிம்புவுடனான பிரேக்கப்புக்கு பிறகு சிறிது காலம் சிங்கிளாக இருந்தார். சூழல் இப்படி இருக்க விஜய்யை வைத்து பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்தார் நயன். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அவருக்கும் பிரபுவுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் பிரபுதேவாவோ ஏற்கனவே திருமணமாகியிருந்தார். இருப்பினும் இந்தக் காதலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வதில் இரண்டு பேருமே உச்சக்கட்ட உறுதியோடு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Deva s Throwback Interview About Nayanthara

பச்சை குத்திய நயன்: அதன் காரணமாக தனது முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் அவர். மேலும் நயனோ பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தினார். அதுமட்டுமின்றி அவருக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறியது, சினிமாவிலிருந்து ஓய்வு என அறிவித்தது என்று தீவிர காதலில் குதித்தார். ஆனால் அவர்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரன தங்களது காதலை பிரேக்கப் செய்தார்கள். தொடர்ச்சியாக இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த நயன் கொஞ்சம் அப்செட் ஆகத்தான் செய்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: சிறிது காலம் நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். அப்படி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அவர். அதன்படி நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்து லிவிங் டூ கெதரில் இருந்தார். பிறகு சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். வாடகை தாய் மூலம் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள்.

நடிப்பில் பிஸி: இப்போதும் நயன் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் அறிமுகமான அவர் தமிழில் ராக்காயி, மண்ணாங்கட்டி படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடித்திருக்கிறார் நயன். அதேபோல் டாக்சிக் என்ற படத்திலும் யஷ்ஷுடன் நடித்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா குறித்து பிரபுதேவா கொடுத்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பிரபுதேவாவின் பேட்டி: அவர் வில்லு பட சமயத்தில் அளித்திருந்த பேட்டியில், "பொதுவாக ஒரு ஹீரோயின் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு அந்தப் படத்தை மறந்துவிடுவார். ஆனால் நயன்தாரா அப்படி இல்லை. படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸான பிறகும் தன்னுடைய படமாக நினைத்து ஒரு ஹீரோ, இயக்குநர் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வோமோ அதேபோல் அவரும் இருப்பார். அவ்வளவு சின்சியராக இருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X