Prithviraj On Kamal: "ஒருநாள் முதல்வர் மாதிரி ஒருநாள் கமல்... பிருத்விராஜ்ஜின் லை ஃப் டைம் ட்ரீம்!

சென்னை: மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ், தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித் குறித்து ரசிகர்கள் முன்னிலையில் பிருத்விராஜ் பேசியது இணையத்தில் வைரலானது.

அதேபோல், தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி பிருத்விராஜ் பேசியதும் ட்ரெண்டாகியுள்ளது. அதில், கமல்ஹாசன் குறித்து பேசியுள்ள பிருத்விராஜ், அவரது லைஃப் டைம் கனவு என்னவென்பதையும் தெரிவித்துள்ளார்.

 Prithviraj On Kamal: Prithviraj wishes to live as Kamal Haasan for one day only

ஒருநாள் கமல்ஹாசன்: மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் பிருத்விராஜ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என பிஸியாக வலம் வரும் பிருத்விராஜ், தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சலார் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்துள்ள பிருத்விராஜ், இன்னொரு பக்கம் மோகன்லால் நடிப்பில் லூசிபர் இரண்டாம் பாகம் இயக்கவும் ரெடியாகிவிட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் கொச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அஜித் குறித்து பிருத்விராஜ் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், அஜித்தின் சிம்பிளிசிட்டி பற்றியும், வெற்றி, தோல்விகளை அவர் அணுகும் விதம் குறித்தும் பிருத்விராஜ் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் பற்றி பிருத்விராஜ் பேசியதும் வைரலாகி வருகிறது.

தனது ரோல்மாடல் யார் என ஒரு பேட்டியில் பேசியுள்ளார் பிருத்விராஜ். அதில், கமல்ஹாசன், மோகன்லால், அமிதாப் பச்சன் மூவரும் தான் தனது ரோல் மாடல் என பெருமிதமாகக் கூறியுள்ளார். அதேபோல், "ஒருநாள் மட்டும் இன்னொருவராக வாழ வேண்டும் என்றால், நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்" என பிருத்விராஜ்ஜிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் உடனடியாக கமல்ஹாசன் தான் எனக் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் சாரின் மிகத் தீவிரமான ரசிகன் நான், அவரை இயக்குநராக பார்த்து நான் வியந்துள்ளேன். ரொம்பவே திறமையான இயக்குநர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அதனால் ஒருநாளில் அவராக மாற வேண்டும் என்பது தான் கனவு என பிருத்விராஜ் கூறியுள்ளது, கமல் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், பிருத்விராஜ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் கமல்ஹாசனை நடிகராக தான் பிடிக்கும் என பலரும் சொல்வதுண்டு. ஆனால், பிருத்விராஜ் மட்டுமே கமல்ஹாசனை இயக்குநராக பிடிக்கும் என்றுள்ளார். இந்தப் பேட்டிக்குப் பின்னர் தான் பிருத்விராஜ் படங்கள் இயக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பிருத்விராஜ் இயக்கியுள்ள லூசிபர், ப்ரோ டேடி என இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது முக்கியமானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X