எனக்கு ஜோதிகா கேரக்டர்தான் வேண்டும்.. அடம்பிடித்த அசின்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் அசின். விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம் என பலருடன் ஜோடி போட்டு நடித்த அவர்; ஹ்நிதியிலும் ஒரு கலக்கு கலக்கியவர். தன்னுடைய கரியர் பீக்கில் இருக்கும்போதே மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுலை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது நடிப்பிலிருந்து ஒதுங்கி கணவருக்கு தொழிலில் ஒத்தாசையாக இருந்துவருகிறார். அந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

கேரளாவை சேர்ந்த அசின் தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அசினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், அஜித், சூர்யா, கமல், விக்ரம் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரிசையாக ஹிட்டுகளாக கொடுத்துக்கொண்டிருந்தார் அவர்.

ட்ரீம் ரோல் கல்பனா: தமிழில் அவர் ஏகப்பட்ட கேரக்டர்களை ஏற்றிருக்கிறார். இருப்பினும் அவரை அத்தனை பேரும் தலை மேல் தூக்கி வைத்து இன்னமும் கொண்டாடும் கேரக்டர் என்றால் கஜினி படத்தில் அவர் ஏற்றிருந்த கல்பனா கேரக்டர்தான். அந்த கேரக்டரில் குறும்பு, காதல், ஏக்கம் என அத்தனையையும் கலந்துகட்டி நடித்திருப்பார். அந்த கேரக்டர்தான் அவருக்கு ஹிந்தியிலும் அவர் அறிமுகமாக முக்கியமான காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Producer Balaji Prabhu has revealed a throwback incident about Asin

ஹிந்தியிலும் கலக்கல்தான்: கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அறிமுகமான அசின்; அங்கும் முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பெற்றார். அதனையடுத்து முழுக்க முழுக்க அவர் பாலிவுட்டிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்தார். அப்படிப்பட்ட சூழலில் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றதால் அவருக்கு தமிழ்நாட்டில் கண்டனங்களும் எழுந்தன. இதற்கிடையே அக்‌ஷய் குமார் மூலம் மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மா அசினுக்கு பழக்கமானார்.

திருமணம் செய்துகொண்ட அசின்: அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கரியர் பீக்கில் இருக்கும்போது திருமணம் செய்துகொள்வதற்கு பெரும்பாலான நடிகைகள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் தன்னுடைய மார்க்கெட் நல்லபடியாக இருந்தபோதே ராகுலை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார் அசின். அந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி குழந்தையையும், கணவரின் தொழிலையும் கவனிக்கும் பொறுப்பில் இருந்துவருகிறார் அவர்.

மறுத்த அசின்: சூழல் இப்படி இருக்க அசினுக்கும், ராகுலுக்குமிடையே பிரச்னை என்றும்; அதன் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்றும் தகவல்கள் தீயாக பரவின. ஆனால் அதனை அசின் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில் சூர்யாவின் படத்தில் அசின் நடிக்க கமிட்டானபோது அவர் வைத்த கண்டிஷன் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது கிருஷ்ணா இயக்கத்தில் உருவான சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா நடித்திருந்த கேரக்டரில் அசினைத்தான் நடிக்க கேட்டார்களாம்.

அசின் தந்தை வைத்த கண்டிஷன்: ஆனால் அசின் தந்தையோ பூமிகா கேரக்டர் வேண்டாம்; ஜோதிகா கேரக்டர் வேண்டும் என்று கூறினாராம். அசினும் அதே மைண்ட் செட்டில்தான் இருந்தாராம். இதனை இயக்குநர் சென்று சூர்யாவிடம் சொல்ல; பூமிகா கேரக்டரும் ஹீரோயினுக்கு சமமான கேரக்டர்தானே. நான் வேண்டுமானால் அசினிடம் பேசி பார்க்கவா? இல்லையென்றால் நீங்களே இன்னொரு முறை பேசி பாருங்கள் என்று கூறினாராம். அதன்படி மீண்டும் அசினிடம் பேசும்போது ஜோதிகா கேரக்டர்தான் வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தாராம். பிறகு இது ஒத்துவராது என்று முடிவு செய்துதான் அவரை கமிட் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தார்களாம். இதனை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X