விஜயகாந்த்திடம் வார்த்தையை விட்ட தங்கர்பச்சான்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

சென்னை:கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் உடல்நலக் குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் சமீபத்தில்தான் நடந்தது. அதனையொட்டி அவரது சமாதிக்கு தமிழ்நாடெங்கிலும் இருந்து பலரும் சென்றார்கள். இந்தச் சூழலில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். மதுரையில் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் சினிமா ஆசையின்பால் சென்னைக்கு வந்து இங்கு பல கஷ்டங்களை சந்தித்தவர். ஒருவழியாக அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து மிளிர தொடங்கினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பீக்கில் இருந்தபோது தனக்கென ஒரு கோட்டையை உருவாக்கி அதில் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். உருவத்திலும், நடிப்பிலும் ஊர்க்காரர் போல் இருந்ததால் அவரை தங்களில் ஒருவராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

throwback stories vijayakanth balaji prabhu

உச்சத்தில் விஜயகாந்த்: வில்லனாக அறிமுகமானாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து அதை சாதித்தும் காட்டியவர். ஒரே வருடத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து படுபிஸியாகவும் திகழ்ந்துகொண்டிருந்தார். ரஜினிகாந்த், கமலுக்கு அவர்களது 100ஆவது படம் சரியாக போகவில்லை. ஆனால் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு: அதேபோல் திரைப்பட கல்லூரியிலிருந்து இயக்குநராகும் கனவோடு வெளியே வந்த பலருக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது விஜயகாந்த்தான். அதுமட்டுமின்றி பல இயக்குநர்கள் விஜயகாந்த்தை வைத்துதான் முதல் படத்தை இயக்கினார்கள். அந்த அளவுக்கு புதுமுகங்கள் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தவர். மேலும் சினிமாவில் இருப்பவர்கள் எந்தவித கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக தனது அலுவலகத்தில் தொடர்ந்து உணவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த விஜயகாந்த்: இயக்குநர்கள் மட்டுமின்றி விஜய், சூர்யா போன்ற வளர்ந்துவந்த நடிகர்களின் படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து அந்தப் படங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியவர் விஜயகாந்த். சூழல் இப்படி இருக்க அரசியலில் நுழைந்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவர் சந்தித்த சில துரோகங்கள் அவரை சாய்த்தது. அதன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.

தயாரிப்பாளர் பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "கள்ளழகர் படத்தின் பாடல் காட்சி வடமாநிலத்தில் எடுக்க போனார்கள். அப்போது ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இந்த தமிழ் சினிமாவில்தான் 60 வயதுக்கும் அதிகம் உள்ளவர்களையும் ஹீரோவாக போடுகிறார்கள். இவர்களை எடுக்க மூடு வரவில்லை என்று சொல்லிவிட்டார். விஜயகாந்த்தும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அடுத்த நாள் நடந்தது: அடுத்ததாக அந்த யூனிட் குலுமணாலிக்கு சென்றது. அப்போது தங்கர்பச்சான் படுத்திருந்த ரூமுக்கு சிலர் சென்று கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தார்கள். தங்கர்பச்சானோ பயந்துபோய்விட்டார். அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு வந்தபோது என்ன தங்கர்பச்சான் நன்றாக தூங்குனீர்களா என்று கேட்க; தங்கரோ, தெரியாமல் வார்த்தையை விட்டுவிட்டேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X