ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆடைகளை அவிழ்த்தெறிந்த சூர்யாவின் அப்பா.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்
சென்னை: சிவகுமார் ஒரு நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். நடிகராக மட்டுமின்றி ஓவியராகவும் தனது திறமையை நிரூபித்தவர். அவர் வழியிலேயே அவரது மகன்களான சூர்யா, கார்த்தி ஆகிய இரண்டு பேருமே நடிகர்களாக இருக்கிறார்கள். சிவகுமார் நடிப்பில் பீக்கில் இருந்தபோது பெரும்பாலும் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். இந்தச் சூழலில் அவர் குறித்து பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
சிவகுமார் 80களில் பீக்கில் இருந்தவர். பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவருக்கென்று திரைத்துறையில் தனித்த மரியாதை இருக்கிறது. ஒழுக்கமானவர், சர்ச்சைகளில் சிக்காதவர் என்று அவருக்கு பலரும் புகழாரம் சூட்டுவார்கள். இப்போது நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் மேடை பேச்சுக்கள் பேசுவது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என இருக்கிறார். முக்கியமாக இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் சிவகுமார் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எனது அப்பா மூன்று க்ரைம் கதைகளை தொடர்ந்து செய்தார். சரி ஜானரை மாற்றலாம் என முடிவெடுத்து காதல் கதையை இயக்குவதற்கு முடிவு செய்தார்.அதன்படி பௌர்ணமி அலைகள் படத்தின் கதையை உருவாக்கினார். அந்த சமயத்தில் எனது அப்பாவும், சிவகுமாரும் சேர்ந்து தொடர்ந்து படம் செய்துவந்தார்கள்.
ஒத்துக்கொண்ட சிவகுமார்: பெளர்ணமி அலைகள் கதையை கேட்டதும் நடிப்பதற்கு சிவகுமார் ஒத்துக்கொண்டார். முதல் நாள் ஷூட்டிங் ஊட்டியில் தொடங்கியது. அப்போது சிந்து பைரவி படத்தின் விழா ஒன்று சென்னையில் நடந்தது. அதில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். எனவே ஹீரோ சிவகுமாரும் அதில் கலந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே ஒருநாள் கழித்து பௌர்ணமி அலைகள் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள தனது மேனேஜரை விட்டு எனது அப்பாவிடம் அனுமதி கேட்டார்.
நோ பெர்மிஷன்: ஆனால் அப்பாவோ இது ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. நாளை முதல் நாள் ஷூட்டிங் நடக்கவில்லை என்றால் எல்லாமே சொதப்பிவிடும் என்று கூறிவிட்டார். அதனை சிவகுமாரிடம் அவரது மேனேஜர் சொன்னதும்; சிவகுமார் டென்ஷனாகிவிட்டார். வரிசையாக பணியாற்றுகிறோம் ஒருநாள் கூட அனுமதி தரமாட்டேங்கிறாரே என்ற கோபம் சிவகுமாருக்கு இருந்தது. மேலும் அப்பா அனுப்பிய ஊட்டி ரயில் டிக்கெட்டையும் மீண்டும் கொடுத்துவிட்டார் சிவகுமார்.
காரில் வந்த சிவகுமார்: ட்ரெய்ன் டிக்கெட் மீண்டும் வந்ததும் சிவகுமார் ஷூட்டிங்கிற்கு வரமாட்டாரோ என்று அப்பா நினைத்துவிட்டார். இருந்தாலும் ஒரு நம்பிக்கையோடு தனது டீமோடு ஊட்டி சென்றுவிட்டார். அப்போதெல்லாம் முதல் ஷாட் ஹீரோவை வைத்துதான் எடுப்பார்கள். காலை 7 மணிக்கு ஷூட்டிங்கை ஆரம்பிப்பதற்கு அப்பா முடிவு செய்திருந்தார். சிவகுமார் சரியாக 6.59 மணிக்கு காரிலேயே ஊட்டிக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
ஆடைகளை அவிழ்த்த சிவகுமார்: காரிலிருந்து இறங்கியவர் தான் அணிந்திருந்த உடைகளை கோபமாக அவிழ்த்தெறிந்துவிட்டு எங்கே உங்கள் கம்பெனி காஸ்ட்யூம் கொடுங்கள் என்று சொல்லி அதை போட்டுக்கொண்டார். எப்போதும் ஷூட்டிங்கில் அப்பாவும், சூர்யாவின் அப்பாவும் பேசிக்கொள்வார்கள். ஆனால் அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும்வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அசிஸ்டெண்ட்ஸை வைத்துதான் பேசிக்கொள்வார்கள். படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்து கிளம்பும்போது; அப்பாவிடம் வந்த சிவகுமார் சரி நான் கிளம்புகிறேன் என்று கூறினார். உடனே அப்பாவோ, படம் முழுதாக தயாரானதும் சொல்கிறேன் வந்து பாருங்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதற்கு சிவகுமாரோ இல்லை நான் தியேட்டரிலேயே பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











