சார் விஜய் சேதுபதி மட்டும் வேண்டாம்.. கறார் காட்டிய இயக்குநர்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: விஜய் சேதுபதி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். கமர்ஷியல் பாதை மட்டுமின்றி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் கெட்டிக்காரராக இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் மெகா ஹிட்டானது. இங்கு மட்டுமின்றி சீனாவிலும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அடுத்ததாக மிஷ்கின் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார் அவர். கண்டிப்பாக அந்தப் படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் திறமையும், விடாமுயற்சியும் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்பதற்கு பெரிய உதாரணம் விஜய் சேதுபதி. சின்ன சின்ன வேடங்களில் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் வந்து சென்ற விஜய் சேதுபதியை சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. விஜய் சேதுபதிக்கும் நல்லபடியான அடையாளம் கிடைத்தது.

throwback stories vijay sethupathi soodhu kavvum

தொட்டதெல்லாம் ஹிட்: தனது முதல் படத்துக்கு பிறகு கதைகளை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே கவனமாக இருந்தார். அப்படி அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்,சூது கவ்வும் ஆகிய படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. ஒவ்வொரு படத்திலும் விஜய் சேதுபதி தனது நடிப்பில் வித்தியாசத்தை காட்டிக்கொண்டே இருந்தார். இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ என்ற இடத்தை அடைந்துவிட்டார். அதேசமயம் தனது நட்புகளுக்காக ரம்மி, ஆரஞ்சு மிட்டாய் உள்ளிட்ட படங்களில் நடித்து சூடும் போட்டுக்கொண்டார்.

உடைத்த சேது: ஹீரோவாக வெற்றி பெற்றவர்கள் அந்தப் பாதையிலேயேதான் போக ஆசைப்படுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லை. தன்னுடைய கேரக்டர் நன்றாக இருந்தால் வில்லனாகவும் நடிப்பார். அப்படி அவர் வில்லனாக நடித்த மாஸ்டர், பேட்ட, விக்ரம், ஜவான் உள்ளிட்ட படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் தனது தடத்தை பதித்து வைத்திருக்கிறார். ஃபர்ஸி வெப் சீரிஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் எல்லாம் அவரே டப்பிங் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

மகாராஜா சேது: அவரது நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் வந்தது. 50ஆவது படமான மகாராஜா மெகா ஹிட்டடித்தது. இங்கு மட்டுமின்றி சீனாவிலும் அந்தப் படம் வசூலை குவித்துவருகிறது. அடுத்ததாக மிஷ்கினின் இயக்கத்தில் ட்ரெய்ன் என்ற படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில்தான் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முதன்முறையாக மிஷ்கினுடன் சேது சேர்ந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படமும் சூப்பர் ஹிட்டடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

சீக்ரெட் சொன்ன தயாரிப்பாளர்: இந்நிலையில் சூது கவ்வும் படம் பற்றிய சுவாரஸ்ய விஷயத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் பகிர்ந்திருக்கிறார். சூது கவ்வும் 2 படத்தின் நிகழ்ச்சியில் பேசிய குமார், “சூது கவ்வும் படத்தின் கதையை நலன் குமாரசாமி என்னிடம் சொன்னபோது விஜய் சேதுபதியை ஹீரோவாக போடலாம் என்று சொன்னேன். உடனே அவரோ இல்லை சார் வேண்டாம். நான் விஜய் சேதுபதியை இந்தக் கதையில் யோசிக்கவே இல்லை. லொள்ளு சபா மனோகரைத்தான் நினைத்திருக்கிறேன் என்று சொன்னார். பிறகு நான் ரொம்ப கஷ்டப்பட்டு அவரை ஒத்துக்கொள்ள வைத்தேன்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X