Ajith - அப்பா அம்மா ஊருக்கு போக காசில்லனு காசு கேட்டார்.. அஜித் ஒரு ஃப்ராடுங்க - தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: Ajith (அஜித்) அஜித் தன்னிடம் பணம் வாங்கிவிட்டு இன்றுவரை கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித். கடைசியாக அவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படம் வெளியானது. வலிமை படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து வெளியான துணிவு படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு ரசிகர்கள் நல்ல ரிசப்ஷனை கொடுத்திருந்தனர்.

மகிழுடன் அஜித்: எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்த படத்தை அறிவிக்கும் அஜித்; துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு விக்னேஷ் சிவன் வெளியேறி மகிழ் திருமேனி படத்துக்கு உள்ளே வந்தார். கதைக்கான ஒன்லைனை பிடித்துவிட்டாலும் அதற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு ரொம்பவே மெனக்கெட்டார் மகிழ்.
விரைவில் ஷூட்டிங்: ஒருவழியாக கதை இறுதி வடிவம் பெற்றது. எனவே விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் லைகா நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை மேலும் அதனை தாமதப்படுத்தியதாக கூறப்பட்டது. மேலும், இப்படத்திலிருந்து வெளியேறிவிடலாமா என அஜித் நினைத்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவர் 50 கோடி ரூபாய்வரை அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் வெளியேறமாட்டார் என திரைத்துறையினர் தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் அஜித்தும், மகிழ் திருமேனியும் லொகேஷன் பார்ப்பதற்காக வெளிநாடு பறந்துவிட்டதாகவும், விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளிநாட்டில் அஜித் கார் ஓட்டும் வீடியோவும், எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.
ஏமாற்றினாரா அஜித்?: இந்நிலையில் அஜித் தன்னை ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். அதாவது, 1995ஆம் ஆண்டுவாக்கில் தனது அப்பா, அம்மா ஊருக்கு செல்லக்கூட காசில்லை என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் பணம் கேட்டாராம் அஜித். உடனே யோசிக்காமல் மாணிக்கமும் கொடுத்திருக்கிறார். அதனையடுத்து அஜித், நான் நல்ல நடிகனாக வந்த பிறகு டேட் தருவதாக மாணிக்கம் நாராயணனிடம் உறுதியளித்தாராம்.
பணம் கொடுக்கிறேன் என்று சொன்னார்: அதன் பிறகு அஜித் நடித்த ஒரு படத்துக்கு 15 லட்சம் ரூபாய்வரை பணம் கொடுத்தாராம் மாணிக்கம் நாராயணன். அப்போது அஜித், வேறு ஒரு படத்தில் நடிக்கும்போது அட்ஜெஸ்ட் செய்து கொடுத்துவிடுகிறேன் என்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அஜித் பணம் கொடுக்கவில்லையாம். அப்போது மாணிக்கம் நாரயாணனிடம் அஜித்துக்கு பணம் கொடுத்த ஆதாரம் எதுவும் இல்லாத சூழலில் இப்போது ஆதாரத்தை கண்டுபிடித்துவிட்டாராம். எனவே அஜித் அந்த பணத்தை கொடுப்பாரா என்ற கேள்வியை அவர் முன்வைத்திருக்கிறார்.
இந்தத் தகவல்களை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்தார். மேலும் அந்தப் பேட்டியில் பேசிய அவர்,அஜித் பத்திரிகைக்காரர்களுக்கு பணம் கொடுத்து தன்னைப்பற்றி நல்லவிதமாக எழுத சொல்கிறார் என்றும் கூறினார். மாணிக்கம் நாராயணன் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











