ஜெயலலிதாவையே மிரள வைத்த இளையராஜா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: இளையராஜாவின் பெயரை தமிழ் சினிமாவிலிருந்து எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக இசையமைத்துவருகிறார். நம் முந்தைய தலைமுறை, நம் தலைமுறை, அடுத்த தலைமுறை என பல தலைமுறைகள் இளையராஜாவின் ரசிகர்கள். இப்போதும் தொடர்ந்து இசையமைத்துவரும் அவர் விடுதலை 2 உள்ளிட்ட படங்களுக்கு தனது இசையை கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் இசையின் முகத்தை மாற்றி அமைத்தவர் இளையராஜா. அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வைரமுத்து சிந்து பைரவியில் எழுதியதுபோல் சேரிக்கும் சேர வேண்டும் அதற்கும் பாட்டு படி என்ற வரி உண்மையானது. ஆம் அவரால்தான் வரப்பில் நின்றவரும் வாய் திறந்து பாட ஆரம்பித்தார். தனது முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இளையராஜா. பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக ஆரம்பித்தனர்.

Producer Manickam Narayanan Talks about Ilayaraaja And Jayalalitha

பாவலர் க்ரூப்ஸ்: இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா. பிறகு பல போராட்டங்களை கடந்து சினிமாவில் அறிமுகமாகி தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.

கோட்டையில்ல கொடியுமில்ல அப்பவும் ராஜா: தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமின்றி அவரை சினிமாவிலிருந்து எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என பெரும் கூட்டமே வேலை செய்தது. ஆனால் திறமை இருக்கும் ஒருவரை சினிமா ஒதுக்கி தள்ளிவிடுமா என்ன?. அதுபோல்தான் சினிமா இளையராஜாவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அவரிடம் கோட்டையும் இல்லை; கொடியும் இல்லை; இருந்தாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர்தான் இசை உலகின் ராஜாவாக இருப்பார்.

பயோபிக்: இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக சிறந்த நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல் ஹாசன் திரைக்கதை எழுதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: இளையராஜாவின் இசையில் அடுத்ததாக விடுதலை 2, இளையராஜா பயோபிக் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வரவிருக்கின்றன. இதன் காரணமாக ராஜாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே இளையராஜா பெயர்தான் அதிகம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வைரமுத்து பேசியது, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியது என எங்கும் ராஜாதான். இந்தச் சூழலில் இளையராஜா குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

மாணிக்கம் பேட்டி: தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேசுகையில், "இளையராஜாவை கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்போதைய ஒடிசா முதலமைச்சர் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இளையராஜாவை வரவழைக்க வேண்டும் என்றால் என்னால் முடியும் என்று என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அந்த விழாவுக்கு பட்நாயக், ஜெயலலிதா உள்ளிட்டோரும் விருந்திருனர்களாக வந்திருந்தார்கள்.

மிரண்ட ஜெயலலிதா: இளையராஜாவும் வந்திருந்தார். அந்த விழாவில் மேஸ்ட்ரோ இளையராஜா என்று கூறியதும் அங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த பேரும் ஆரவாரத்தில் கைத்தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். அதை பார்த்ததும் ஜெயலலிதா வாயடைத்துப்போய்விட்டார். மேலும் மேடைக்கு வந்த இளையராஜாவை பார்த்து பாருங்க ஆரவாரத்தை என்று மெய் சிலிர்த்துப்போனார் ஜெயலலிதா" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X