Vijay - தயாரிப்பாளருக்கும் ஹீரோவுக்கும் ஒரே நேரத்தில் விபூதி அடித்த விஜய்?.. செம கில்லியா இருந்திருக்காரே
சென்னை: Vijay (விஜய்) தளபதி விஜய் குறித்து ஒரு விஷயம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது.
விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் கலெக்ஷன் ரீதியாக பட்டையை கிளப்புகிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களும் கூறுகின்றன.
லியோவும் அப்படியே: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இதற்கு முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்திருக்கின்றனவாம். அதனால் விஜய்யின் சம்பளமும் தாறுமாறாக ஏறியிருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடுகிறது.

தளபதி 68: அந்தவகையில் அவர் தற்போது தளபதி 68 படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, வைபவ, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக விஜய்க்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லபடுகிறது.
குஷி: இந்த சூழலில் விஜய் குறித்து புதிய விஷயம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது விஜய்யின் கரியரில் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று குஷி. எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு வெளியானது. இரண்டு காதலர்களுக்கிடையேயான ஈகோ என்ற ஒன்லைனை வைத்து எஸ்.ஜே.சூர்யா அந்தக் கதையை உருவாக்கியிருப்பார்.
புதிய விஜய்: அந்தப் படட்தில் பார்த்தது மாதிரி இதுவரை விஜய்யை அவ்வளவு க்யூட்டாகவும் அழகாகவும் பார்த்ததில்லை என்று அவரது ரசிகர்கள் சொல்வார்கள். அழகு மட்டுமின்றி நடிப்பிலும் பட்டையை கிளப்பியிருப்பார் தளபதி விஜய். அதிரிபுதிரி ஹிட்டடித்த அந்தப் படத்தின் முதன்முதலில் நடிக்கவிருந்தது பிரபுதேவாதானாம்.
என்ன நடந்தது?: சூர்யாவின் முதல் படமான வாலி திரைப்படம் மெகா ஹிட்டாகிவிட்டது. அந்த சமயத்தில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் விஜய்யிடம் ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளரை அழைத்த விஜய், வாலி படம் பார்த்தேன். அந்த இயக்குநருடன் இணைந்து பணியாற்றலாம் என சொல்லியிருக்கிறார்.
உடனே எஸ்.ஜே.சூர்யாவிடம் சென்று விஷயத்தை சொல்லியிருக்கிறார் தேனப்பன். ஆனால் அவரோ இல்லை சார் நான் பிரபுதேவாவை வைத்து இயக்க ஏ.எம்.ரத்னத்திடம் கமிட்டாகிவிட்டேன். கொஞ்ச நாட்களில் ஷூட்டிங் செல்லப்போகிறோம் என சொல்லியிருக்கிறார். உடனடியாக இவரும் ஏ.எம்.ரத்னத்திடம் விஜய் பேசியதை சொல்லிவிட்டு விடுமுறைக்காக லண்டனுக்கு சென்றுவிட்டாராம்.
ஷாக் கொடுத்த விஜய்: லண்டனிலிருந்து திரும்பியவர் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டு ஷாக் ஆகிவிட்டாராம். அதாவது, விஜய் - எஸ்.ஜே.சூர்யா-ஏ.எம்.ரத்னம் கூட்டணியில் குஷி படத்தின் விளம்பரத்தை பார்த்தாராம். ஒருவேளை பிரபுதேவாவை வைத்து எடுக்கப்பட வேண்டிய கதையைத்தான் இவரை வைத்து எடுக்கிறார்களோ என தெரியாவிட்டாலும் பயங்கரமாக ஃபீல் செய்திருக்கிறார் தேனப்பன். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அவரது இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கும் சூழலில், பிரபுதேவாவுக்கும் தேனப்பனுக்கும் தளபதி ஒரே நேரத்தில் விபூதி அடித்துவிட்டாரே என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











