ரூம்ல ஜன்னல் இல்ல.. இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்தார்.. பெரிய மனசு வேணும்.. சுகன்யா பற்றி பிரபலம் ஓபன்

சென்னை: நடிகை சுகன்யா 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் இந்தியன் படத்தில் கமல் ஹாசனுக்கு டஃப் கொடுத்து கஷ்டமான மேக்கப்புகளை போட்டுக்கொண்டு நடித்தார். அது அவருக்கு சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்தது. சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தற்போது சின்னத்திரையில் தலை காண்பிக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளர் சிவா ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தனது அழகாலும், திறமையாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் பெருகின. இதன் காரணமாக விஜயகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார் சுகன்யா.

Throwback Stories Sukanya Shiva

சின்ன கவுண்டர்: ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து மெகா ஹிட்டான படம் சின்ன கவுண்டர். அதில் சுகன்யா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் வெகுளித்தனமான கிராமத்து பெண்ணாக தோன்றிய அவர் எமோஷனல் காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு ரசிகர்களும் பெருகினர். அதேபோல் மகாநதி படத்திலும் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். முக்கியமாக இந்தியன் படத்தில் கமல் ஹாசனுக்கு மனைவியாக வயதான கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார் சுகன்யா.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய சுகன்யா: சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்த சுகன்யா ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகையாக மட்டுமின்றி சில சோலோ ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் அவர், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம், பிரிவு: இந்தச் சூழலில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் திருமணமாகி ஒரே ஆண்டில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெறும் அளவுக்கு சுகன்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என பலரும் யூகித்து வந்தனர். மேலும் அவருக்கு ஒரு மகள் இருப்பதாக பேச்சு எழுந்தது. ஆனால் அதனை அவர் மறுத்தார்.

சிவா பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா; சுகன்யா பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசினார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சுகன்யா ஒரு விஷயத்தை செய்தார். அதனை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கூட செய்யமாட்டார். பிரபுவை வைத்து நான் தயாரித்த சின்ன மாப்ளே படத்தின் ஷூட்டிங் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. எல்லோரும் தங்குவதற்கு லாட்ஜில் ரூம் புக் செய்துவிட்டேன். ஆனால் ஒரு ரூம் மட்டும் நான் நினைத்தது போல் கிடைக்கவில்லை.

நார்மல் ரூம் இல்லை: நார்மல் ரூம்கூட கிடைக்காமல் கட்டி முடித்த ஒரு ரூமைத்தான் கொடுத்தார்கள். அந்த ரூமில் ஜன்னல்கூட இருக்கவில்லை. அந்த ரூமை சுகன்யாவுக்கு கொடுக்கவேண்டிய சூழல் அமைந்துவிட்டது. உடனே அவரது அம்மா, அப்பாவை அழைத்து சென்று ரூமை காண்பித்தேன். அவர்கள் எதுவும் சொல்லாமல் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறோம் என்றார்கள். சுகன்யாவும் அதை சொன்னார். பிறகு அந்த ரூமிலேயே தங்கி படத்தில் நடித்துக்கொடுத்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X