மீனாவிடம் தவறாக நடக்க முயற்சி.. விட்டு விளாசிய விஜயகாந்த்.. ஓபனாக பேசிய தயாரிப்பாளர்

சென்னை: விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிப்பு மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தயாரிப்பாளர் சிவா விஜயகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் படு ட்ரெண்டாகியிருக்கிறது.

விஜயகாந்த் என்றால் அனைவருக்குமே அவரது திடகாத்திரமான உடலும், கனீர் என்ற குரலும், கலையான உருவமும், அவர் செய்த உதவிகளும் உடனடியாக ஞாபகத்துக்கு வரும். அவரால் உதவி பெற்று பலனடைந்தவர்கள் சாமானியர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் உண்டு. விஜய், சூர்யா போன்ற இப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் வளர்ந்த காலகட்டத்தில் அவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து அவர்களுக்கும், அந்தப் படங்களுக்கும் வெளிச்சத்தை பெற்றுத் தந்தவர் விஜயகாந்த். அதனையடுத்து அரசியலிலும் அடியெடுத்து வைத்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். தொடர்ந்து ஆக்டிவ் அரசியலில் இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

throwback stories meena vijayakanth

உயிரிழப்பு: இதன் காரணமாக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்தாலும் அவரது உடல்நிலை முன்னர் போல் இயல்பாக இல்லை. அதனையடுத்து அரசியலிலிருந்து ஒதுங்கிய அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. சூழல் இப்படி இருக்க அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. இந்தச் சூழலில் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் சிவா ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


சிவா பேட்டி: சிவா அளித்த பேட்டி ஒன்றில், ”விஜயகாந்த் எப்போதும் படத்தில் மட்டும் கேப்டனாக இருந்ததில்லை. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அவர் எப்போதும் கேப்டனாகத்தான் இருந்திருக்கிறார். தனியாளாக பல வேலைகளை செய்திருக்கிறார். நட்சத்திர கலை விழாவை அவர்தான் முன்னெடுத்து நடத்தினார். அந்த நட்சத்திர கலை விழாவின்போது மீனா உயிரோடு வந்ததற்கு காரணமே விஜயகாந்த்தான்.

என்ன நடந்தது: அதாவது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும்போது ஹோட்டல் வாசலில் 1000 பேர் கூடி நின்றார்கள். போலீஸ் பாதுகாப்பு அவ்வளவாக இல்லை. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார் என மூன்று பேர் சேர்ந்து நடிகைகளின் லக்கேஜுகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு மீனா அருகே வந்து தவறாக நடந்துகொள்ள முயன்றார். ரொம்பவே மோசமாக நடந்துகொள்ள ட்ரை செய்தார்.

விஜயகாந்த்தின் மாஸ்: மீனாவிடம் சில்மிஷம் செய்ய வந்த அவரை விஜயகாந்த் கவனித்துவிட்டார். உடனே அந்த நபரிடம் வேகமாக நெருங்கி ஹெல்மெட்டை அப்படியே தூக்கிவிட்டு மண்டையில் செமயாக அடித்துவிட்டார். அந்த நபருக்கு ரத்தம் கொட்ட தொடங்கிவிட்டது. அதனைப் பார்த்து தள்ளுமுள்ளு செய்தவர்கள் அத்தனை பேரும் பயந்து ஓடிவிட்டார்கள். அதற்கு பிறகுதான் நடிகைகளை அந்த வாகனத்தில் பத்திரமாக அழைத்து வர முடிந்தது” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X