20 வயதிலேயே தனுஷ் அப்படித்தான்.. தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்யம்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படமாக ராயன் படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் தனுஷ் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் பேசியிருக்கிறார்.
கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

பிஸி தனுஷ்: தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.
தனுஷ் 50: நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும், சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் குபேரா படத்திலும் நடிக்கிறார் தனுஷ்.
ஜூன் மாதம் ரிலீஸ்: அடுத்த மாதம் படம் ரிலீஸாகவிருக்கிறது. படத்திலிருந்து அடங்காத அசுரன் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப் பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார். பாடலை பார்த்த ரசிகர்கள் அதற்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் தனுஷ் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் பேசியிருக்கிறார்.
ஞானவேல் பேட்டி: ஞானவேல் பேசுகையில், "வெங்கட் பிரபு, எஸ்.பி.சரணை வைத்து சமுத்திரகனி இயக்கிய உன்னை சரணடைந்தேன் கதையை முதலில் தனுஷிடம்தான் சொன்னார். அவருக்கு அந்தக் கதை பிடித்துவிட்டது. ஆனால் தனுஷோ, 'கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு இது செட் ஆகாது. நான் வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். கமர்ஷியல் படம்தான் எனக்கு செட் ஆகும். இதனை கேட்டு நான் ஷாக்காகிவிட்டேன். ஏனெனில் அப்போது தனுஷுக்கு வயது 20தான். அப்போதே அவர் தனக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











