சில்க் ஸ்மிதா திருமணம் செய்யவிருந்தது இவரைத்தானாம்.. வெளியானது டாப் சீக்ரெட்.. மரணத்துக்கும் காரணம்?

சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. மேலும் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்றும் இன்றளவும் பலர் கேள்வி எழுப்பிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்த கண்ணழகி, திராவிட பேரழகி என்று புகழப்பட்டவர் சில்க் ஸ்மிதா. விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட சில்க் ஸ்மிதாவுக்கு ஆந்திராதான் பூர்வீகம். ஒரு ஷூட்டிங்கிற்காக ஆந்திரா சென்ற வினு சக்கரவர்த்தியின் கண்களில் பட்ட அவர்; சினிமாவுக்குள் நுழைந்தார். கடகடவென வளர்ச்சியடைந்த அவரது கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.

சில்க் ஸ்மிதாவின் அறிமுகம்: தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.

Puliyur Saroja s throwback interview about Silk Smitha s death

திராவிட பேரழகி சில்க் ஸ்மிதா: இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.

தற்கொலை: தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா காதலுக்காகவும், அன்புக்காகவும் ரொம்பவே ஏங்கியவர். அவர் ஒருவரை காதலிக்கவும் செய்தார். முக்கியமாக அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று தனது மனதில் பெரிய மாளிகையையே கட்டி வைத்திருந்தார். ஆனால் திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதற்கு காரணம் சில்க் ஸ்மிதா காதலித்தவர் ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது.

புலியூர் சரோஜா பேட்டி: இந்நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி பிரபல நடன அமைப்பாளரான புலியூர் சரோஜா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருமுறை நான் திருப்பதி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர் ஒரு நகை பாக்ஸை கொண்டுவந்து காண்பித்து நான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன் என்று சொல்லி எனது காதுக்குள் அந்த பெயரை சொன்னார்.

யார் அந்த பையன்?: அவரிடம் ராதாகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்தார். அவரது மகனுக்கும் எனக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக சொல்லி அந்த பையனின் பெயரைத்தான் என்னுடைய காதில் சில்க் ஸ்மிதா கூறினார்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அப்போ அந்த ராதாகிருஷ்ணனும், அவரது மகன்தான் சில்க் ஸ்மிதா மரணத்துக்கு காரணமா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கிடையே ராதாகிருஷ்ணன் ஒரு மருத்துவர் என்றும்;முதலில் அவரைத்தான் சில்க் ஸ்மிதா காதலித்ததாகவும் ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X