சிஷ்யன்னா இப்படித்தான் இருக்கணும்.. நன்றி மறக்காத ரஜினிகாந்த் - குட்டி ப்ளாஷ்பேக்

சென்னை: தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலசந்தரிடம் ரஜினிகாந்த் நன்றி மறக்காமல் நடந்துகொண்ட விதம் குறித்த ப்ளாஷ்பேக்

ரஜினிகாந்த். வைரமுத்து எழுதியதுபோல் இந்த பெயருக்குள்ளே காந்தம் இருப்பது உண்மைதான். சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் ஈர்த்த ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டார் நாற்காலியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இளைய ஹீரோக்களுக்கு ஈடு கொடுத்து நடித்துவருகிறார்.

எல்லோரிடமும் ரஜினியின் தாக்கம்

எல்லோரிடமும் ரஜினியின் தாக்கம்

ஒருகாலத்தில் நடிக்க வந்தவர்களுக்கு எப்படி சிவாஜியின் தாக்கம் இருந்ததோ அதேபோல் கடந்த 40 வருடங்களாக நடிக்க வருபவர்களுக்கு ரஜினிகாந்த்தின் தாக்கம் இருக்கும். அந்த அளவு தனது தனித்த ஸ்டைலால் கவர்ந்து வைத்திருக்கிறார். அவர் தலை கோதும் முறை, நடை, உடை, அவரது உடல் மொழி என அனைத்திலும் ஸ்டைல் ததும்ப ததும்ப நிறைந்திருக்கும்.

பாலசந்தர் அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த்

பாலசந்தர் அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த்

ஓட்டுநராக இருந்தவர் சினிமா மீது ஆர்வத்தில் சினிமா கல்லூரியில் படித்து பாலசந்தர் கண்ணில் பட்டு திரையுலகுக்கு அறிமுகமானார். அபூர்வ ராகங்கள் முதல் படமாக அமைந்தது. அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும், கமல் ஹாசனுடனும் நடித்துவந்தார். இருப்பினும் தனது ஸ்டைலால் தனித்தே தெரிந்தார். ஒருகட்டத்தில் கமல், ரஜினி என இருவருமே முடிவெடுத்து தனித்தனியாக ந்டித்தனர்.

நெற்றிக்கண் ரஜினிகாந்த்

நெற்றிக்கண் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தனியாக நடிக்க ஆரம்பித்ததும் அவருக்கென்ற மார்க்கெட் சரசரவென உயர்ந்தது. கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட ரஜினி அவற்றில் என்னென்ன வித்தியாசம் காண்பிக்க முடியுமோ அத்தனையையும் காண்பித்தார். அப்படி அவர் நடித்த படம்தான் நெற்றிக்கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து. குறிப்பாக அதில் ரஜினிகாந்த் ஏற்றிருந்த வயதான கதாபாத்திரமான சக்கரவர்த்தி கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார். தனுஷேகூட ரஜினியின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்றால் நெற்றிக்கண் சக்கரவர்த்தி கதாபாத்திரத்தில்தான் நான் நடிக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் நன்றி மறக்காத ரஜினிகாந்த்

எப்போதும் நன்றி மறக்காத ரஜினிகாந்த்

நெற்றிக்கண் படம் ஆரம்பிக்கும்போது ரஜினிகாந்த் ஓரளவு வளர்ந்துவிட்ட நடிகர். இந்தப் படத்தை தயாரித்ததோ கே.பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர். எனவே அப்போது பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இ ருந்த பிரமிடு நடராஜன் படத்தில் ரஜினியை ஒப்பந்தம் செய்வதற்காக சந்தித்திருக்கிறார். படம் குறித்தும், டெக்னீஷியன்ஸ் குறித்தும் பேசிவிட்டு ஒரு தொகையை அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார் நடராஜன்.

பதறிப்போன ரஜினிகாந்த் உடனடியாக எழுந்து, 'ஐயய்யோ என்னது இது. இதெல்லாம் வேண்டாம். பாலசந்தர் சார் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கணுமா? அதெல்லாம் வேண்டாம்' என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினியை வற்புறுத்திய பிரமிடு நடராஜன்

ரஜினியை வற்புறுத்திய பிரமிடு நடராஜன்

அட்வான்ஸ் கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த நடராஜனோ, 'உங்களுடைய சம்பளம் என்ன என்பது குறித்து ஏவிஎம் (நெற்றிக்கண் படத்துக்கு முன்னதாக ஏவிஎம் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணியிருந்தார் ரஜினி) நிறுவனத்திடம் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். எனவே அட்வான்ஸை வாங்கிக்கொள்ளுங்கள். இதை வேண்டாம் என்று சொன்னால் நெற்றிக்கண் படத்தையே விட்டுவிடுவோம்' என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து இனியும் வாங்காமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று முடிவெடுத்த ரஜினி ஒருவழியாக அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டாராம். எந்த உச்சத்திற்கு சென்றாலும் தூக்கிவிட்டவரை மறக்கக்கூடாது என்பதற்கேற்ப ரஜினி செயல்பட்டிருக்கிறார். மேலும் சிஷ்யன்னா இப்படித்தான் இருக்கணும் என ரசிகர்கள் புகழ்நதுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X