Fire ரச்சிதா.. ச்சீ ச்சீ காசுக்காக பண்ணல.. இவ்வளவா இறங்க முடியும்.. ஓபனாக சொல்லிட்டாங்களே ப்பா!
சென்னை: சின்னத்திரையில் அடையாளம் பெற்று பிக்பாஸ் மூலம் மேலும் பிரபலமடைந்த ரச்சிதா மகாலட்சுமி தற்போது Fire என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார். மேலும் சாந்தினி, சாக்ஷி அகர்வால், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் படத்திலிருந்து மெது மெதுவாய் என்ற பாடல் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி கன்னட மொழி சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தவர். பிறகு தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரச்சிதா சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பாகத்தில் நடித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்தார். அப்போதிருந்து அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக ஆரம்பித்தது.

செம ஃபேமஸ்: அந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரச்சிதா மகாலட்சுமிக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து வாய்ப்புகளும் அவருக்கு சரளமாக கிடைக்க ஆரம்பித்தன. அப்படி அவர் தமிழில் வெளியான பல சீரியல்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் சீரியல்களிலும் நடித்த அவர்; நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.
பிக்பாஸ் ரச்சிதா: இப்படிப்பட்ட சூழலில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார். அந்த சீசனில் டைட்டில் எதுவும் அடிக்கவில்லை என்றாலும் அந்த நிகழ்ச்சி ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது. இதற்கிடையே உப்பு கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மேலும் சில படங்களில் நடிக்க கமிட்டானார். அப்படி அவர் கமிட்டான படங்களில் ஒன்றுதான் Fire. ஜேஎஸ்கே சதீஷ்குமார் இப்படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.

செம கிளாமர்: இதில் பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சிங்கம்புலி, சாக்ஷி அகர்வால், சாந்தினி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானபோதே இந்தப் படத்தில் ரச்சிதா கிளாமரில் உச்சம் தொடுவார் என்பது உறுதியானது. சூழல் இப்படி இருக்க படத்தில் இடம்பெற்றிருக்கும் மெது மெதுவாய் பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதனையடுத்து நேற்று பாடலின் முழு வீடியோவும் வெளியானது.
காசுக்காக பண்ணல: அந்த முழு வீடியோவையும் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கின்றன. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் கிளாமரில் எல்லை மீறியிருந்தார் ரச்சிதா மகாலட்சுமி. நம்ம ரச்சுவா இவங்க என்று பலரும் வாயை பிளந்தார்கள். இந்நிலையில் Fire படம் குறித்து ரச்சிதா கொடுத்த பேட்டி ஒன்று தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியின்போது கிளாமர் ரோல், போட்டோஷூட் உள்ளிட்டவை குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "ச்சீ ச்சீ காசுக்காக இதை நான் பண்ணல. இதை வெச்சுதான் காசு பண்ணனும் என்று நினைத்தால் அது ரொம்ப தவறாகிடும். இது அந்த மன நோக்கமே கிடையாது. சமீபத்தில் ஒரு திருமண மண்டபத்தில் ஒரு பெண் பிகினி அணிந்துகொண்டு என் உடை என் சுதந்திரம். பிகினி அணிந்துதான் தாலி கட்டுவேன் என்று கூறினார். அதை பார்த்து எனக்கு ஷாக் ஆகிவிட்டது. நம் ஆடை நம் உரிமை என்று என்ன சொன்னாலும் இந்த அளவுக்கா இறங்க முடியும். அதனால் அவர் அப்படி செய்தது அந்தப் பெண்ணுக்கு மட்டும் பாதிப்பில்லை.அதை பார்த்த பிறகு மற்ற பெண்களையும் எல்லோரும் அப்படித்தான் பார்ப்பார்கள். இந்தப் படத்தில் அதை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











