சூழ்ந்த கட்சியினர்.. ரஜினிக்கு பிரச்னை வரக்கூடாது.. ஜெயலலிதாவின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. என்ன நடந்தது?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கூலி படத்தை முடித்திருக்கும் அவர் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் மீது ரஜினியின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினி குறித்து ராதா ரவி ஒரு பேட்டியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

ரஜினியின் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸாகி சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தார். அதில் அவருடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2: கூலி படத்தில் நடித்து முடித்த கையோடு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கண்டிப்பாக வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெறும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஜெயிலர் 2வில் பாலகிருஷ்ணாவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.

ஆச்சரியம்தான்: ரஜினிக்கு இப்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறாரே என்று திரைத்துறையினர் ஆச்சரியம்தான் பட்டிருக்கிறார்கள். அவரது இந்த சுறுசுறுப்பும் அவருக்கு பலரும் ரசிகர்களாக இருப்பது காரணம் என்பது குறிப்பிடத்தகக்து. அதேபோல் அவரது பல ஓபன் ஸ்டேட்மெண்ட்டுகளும் அவருக்கு ஆதரவையும், சர்ச்சையையும் பெற்று கொடுத்திருக்கிறது என்பது கடந்த கால வரலாறு.

Radha Ravi says Jayalalithaa told Rajini not to get into trouble
Photo Credit:

ஜெயலலிதாவுடன் மோதல்: அவர் சந்தித்த சர்ச்சைகள், பிரச்னைகளில் முக்கியமானது ஜெயலலிதாவுடனான அவருக்கு ஏற்பட்ட மோதல். பாட்ஷா பட வெற்றி விழாவில் பேசிய ரஜினி, 'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது' என்று கூறினார். அவர் அப்படி பேசியபோது ஜெயலலிதாதான் தமிழ்நாட்டின் முதலமைச்சார். அதேபோல் இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிய ரஜினிகாந்த், 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியது' என ஒரே போடாக போட்டார்.

தில்லுதான்: ரஜினி அப்படி பேசியதை பார்த்து அனைவருமே அதிர்ச்சிதான் அடைந்தார். ஏனெனில் ஜெயலலிதாவை திரைத்துறையிலிருந்து இந்த அளவுக்கு யாருமே ஓபனாக எதிர்த்ததில்லை. அவர் அப்படி பேசியதால் ரஜினி vs ஜெயலலிதா என்ற நிலையும் இருந்தது. இருப்பினும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பத்திரிகையும் வைத்தார்; ஜெயாவும் அந்தத் திருமணத்தில் கலந்தும் கொண்டார்.

ராதா ரவி சொன்னது: இந்நிலையில் ரஜினி மற்றும் ஜெயலலிதா குறித்து ராதா ரவி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "பாபா படத்தின் ஷூட்டிங் கோலா வளாகத்தில் இருக்கும் செட்டில் நடந்தது. நான் அப்போது அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. ஒரு மீட்டிங்கிற்காக வெளியூர் சென்றுகொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஷூட்டிங்கில் சில அதிமுகவினர் பிரச்னை செய்திருப்பார்கள் போல. உடனே அப்போதைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்னை தொடர்புகொண்டு கட்சிக்காரர்கள் சில பேர் பாபா ஷூட்டிங்கில் பிரச்னை செய்கிறார்களாம். உடனே நீங்கள் அங்கு சென்று என்ன ஏது என்று பாருங்கள்.

ரஜினிகாந்த்துக்கு எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்று கூறினார். அதனையடுத்து நானும் அங்கு சென்று ரஜினியை சந்தித்து, நீங்கள் தைரியமாக ஷூட்டிங் நடத்துங்கள்; என்ன நடந்தாலும் அரசாங்கம் உங்களோடு நிற்கும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் என்றேன். ரஜினிக்கு அதை கேட்டதும் ரொம்பவே சந்தோஷம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X