நீங்கள் என்னை அடிக்கலாம் ராதாரவி.. அட ரஜினி ஓபனா இப்படி சொல்லிருக்காரே
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்த மாதிரியான கதையில் நடித்ததற்காகவே ரஜினிகாந்த்துக்கு பாராட்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்கள் ரசிகர்கள். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்த அவர் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார்.
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்தார். அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து ட்ரோலுக்கும் உள்ளானது. இதன் காரணமாக அவரது நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் உணர்த்தியது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 700 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது.
வேட்டையன் பராக்: அந்தப் படத்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வழக்கம்போல் ரஜினிகாந்த்தின் நடிப்பு அவ்வளவு எனர்ஜியாக இருந்தது. அதனை பார்த்த ரசிகர்களோ இவருக்கு வயது ஆகிறதா இல்லையா என்று சந்தேகப்பட்டனர். அந்த அளவுக்கு அவர் நடிப்பில் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி ரஜினிகாந்த்: தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் முடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடம் இருக்கிறது. படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கூலி படத்தை முடித்த அவர் ஜெயிலர் 2வில் இப்போது ந்டித்துவருகிறார்.
எளிமையான ரஜினி: ரஜினிகாந்த்தை பொறுத்தவரை அவரது நடிப்பு, ஸ்டைலுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு அவரது சிம்ப்ளிசிட்டிக்கும் இருக்கிறார்கள். அவருடன் நடித்த அனைவருமே அவரது அந்த குணத்தை சிலாகித்து பேசுவார்கள். ரஜினிகாந்த் அந்த குணத்தை இழக்காமல் இருப்பதற்கு அவர் தான் பட்ட கஷ்டத்தையும், தன்னை வளர்த்துவிட்டவர்களையும் எந்தக் காலத்திலும் மறக்கவில்லை என்பதுதான் காரணம்.
ராதாரவி சொன்னது: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து நடிகர் ராதாரவி பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "எஜமான் படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. அப்போது நான் அங்கு சென்றிருந்தேன். ஷூட்டிங் நடந்த பேலஸிலேயே அவர் தங்கியிருந்தார். அவரிடம் எனது படத்துக்கு கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் தருவதாக ஒத்துக்கொண்டார். சில நாட்கள் கழித்து அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
நீங்கள் அடிக்கலாம்: அந்தக் கடிதத்தில் இப்போதைக்கு உங்களுக்கு என்னால் கால்ஷீட் தர முடியாது. நீங்கள் சொன்ன சின்ன படத்தை முடித்துவிடுங்கள்; அதனையடுத்து கால்ஷீட் தருகிறேன் என்று சொல்லியிருந்தார். நானும் டிஸ்டர்ப் செய்யவில்லை. பிறகு ஒருநாள் அவரை மீண்டும் சந்தித்தேன். ஒரு படத்துக்காக நடிக்க கூப்பிட்டார். நான் அப்போது அவரிடம், 'என்னை நீங்கள் வில்லனாகவே கூப்பிடுகிறீர்கள். நான் நன்றாக நடிப்பேன்; காமெடி செய்வேன். ஏன் என்னை வயதான கெட்டப்புக்கே கூப்பிடுகிறீர்கள். தொடர்ந்து உங்களுக்கு எதிரானவன் போலவே இருக்கிறேனே என்றேன். அதற்கு அவரோ, ராதாரவி ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் என்னை அடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நீங்கள் என்னை அடிக்கலாம். அப்படி அடித்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான் கூப்பிடுகிறேன்' என சொன்னார். எனக்கு அப்போதுதான் புரிந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











