ரஜினியை அடிப்பதற்குத்தான் ராதாரவி கமிட்டானாராம் - குட்டி ப்ளாஷ்பேக்

சென்னை: நடிகர் ராதாரவி ரஜினியை அடிப்பதற்காக ஒரு படத்தில் கமிட்டான சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ரஜினிகாந்த்துக்கு மக்களில் மட்டுமில்லாமல் திரையுலகில் இருப்பவர்களே ரசிகர்களாக இருக்கின்றனர். ஒருகாலத்தில் நடிக்க வந்தவர்கள் எப்படி சிவாஜி கணேசன் நடிப்பை முன் உதாரணமாக வைத்துக்கொண்டரோ; அதேபோல் இப்போது நடிக்க வரும் நடிகர்கள் ரஜினியின் நடிப்பை முன் உதாரணமாக கொண்டிருக்கின்றனர்.

தொடர் ஹிட் படங்கள் கொடுத்த ரஜினிகாந்த்

தொடர் ஹிட் படங்கள் கொடுத்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் கடும் போராட்டங்களை சந்தித்த ரஜினிகாந்த், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லன், மற்றொரு ஹீரோவுடன் இணைந்து நடித்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் கமல் ஹாசனின் அறிவுரையை கேட்டு தனியாக படங்கள் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டாகின. இதற்கு ரஜினியின் ஸ்டைலும், நடிப்பும் ஒரு காரணம். குறிப்பாக 90களில் ரஜினியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் நடித்த படம் முத்து.

முத்து படத்தில் ரஜினிகாந்த்

முத்து படத்தில் ரஜினிகாந்த்

90களின் சக்சஸ்ஃபுல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் முத்து படத்தில் இணைந்து நடித்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தில் ரகுவரன், மீனா, சரத்பாபு, பொன்னம்பலம், செந்தில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டாகியது. ஜப்பானில் ரஜினிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் முத்து படம் எடுத்துக்காட்டியது. ரஜினி இரட்டை வேடங்களில் நடித்திருந்த அந்தப் படம் ரஜினியின் கேரியரில் பெஸ்ட் படங்களில் ஒன்று.

அம்பலத்தான் ராதாரவி

அம்பலத்தான் ராதாரவி

முத்து படத்தில் ராதாரவியும் நடித்திருக்கிறார். அம்பலத்தான் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ராதாரவி. ராதாரவி வரும் காட்சிகள், அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை என ராதாரவி கேரக்டர் டிசைன் அருமையாக செய்யப்பட்டிருக்கும். தற்போது முத்து படத்தில் நடிக்க எதற்காக ராதாரவி கமிட்டானார் என்று தெரியவந்திருக்கிறது.

ரஜினியை அறைய கமிட்டான ராதாரவி

ரஜினியை அறைய கமிட்டான ராதாரவி

ரஜினியிடம் ராதாரவி எஜமான் பட சமயத்தில் டேட்ஸ் கேட்டிருக்கிறார். அப்போது திடீரென ஒருநாள் ராதாரவியை அழைத்த ரஜினிகாந்த் முத்து என்ற ஒருபடம். நல்ல கேரக்டர். வில்லன் கேரக்டர் நீங்கள் செய்தால் பொருத்தமாக இருக்கும் என கூறியிருக்கிறார்.. அதனை கேட்ட ராதாரவி சலித்துக்கொண்டபடி நான் காமெடிலாம் நல்லா செய்வேன் சார் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ரஜினிகாந்த், இல்லை அது நல்ல கேரக்டர். என்னை அறையுற மாதிரி ஒரு சீன் வருது. அதை ரகுவரன் செய்தால்கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்னை அறைந்தால் ஏற்றுக்கொள்வார்கள் என சொல்லியிருக்கிறார். இதனையடுத்துதான் ராதாரவி முத்து படத்தில் கமிட்டானாராம்.

எல்லா புகழும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு

எல்லா புகழும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு

அதேபோல் ராதாரவி படத்தில் பயன்படுத்தியிருந்த ஹேர் ஸ்டைல் கே.எஸ்.ரவிக்குமாரின் ஹேர் ஸ்டைலை பார்த்து உருவாக்கப்பட்டதாம். அதில் ராதாரவி பயன்படுத்தும் காரில் கொம்புகளை வைத்தது ரவிக்குமாரின் ஐடியாவாம். இதனை ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். முத்து படத்தில் போட்ட பாடல்கள் நன்றாக இல்லை என ஏ.ஆர். ரஹ்மான் வீட்டை ரஜினி ரசிகர்கள் தாக்க சென்றதாகவும் திரையுலகில் ஒரு பேச்சு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X