Vijayakanth - ஜெயலலிதா Vs விஜயகாந்த்.. சட்டசபையில் நாக்கை துருத்திய பின் விஜி சொன்னது இதுவே.. ராதாரவி ஷேரிங்ஸ்

சென்னை: Vijayakanth(விஜயகாந்த்) சட்டப்பேரவையில் விஜயகாந்த் நாக்கை துருத்தியது குறித்த சீக்ரெட்டை ராதாரவி பகிர்ந்திருக்கிறார்.

விஜயகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ரஜினி, கமல் ஆகியோரின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றியை பெற்றவர். வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சினிமாவில் கஷ்டப்பட்டே வளர்ந்தவர். அதனால்தான் தான் வளர்ந்த பிறகு கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.

Radharavi Shares Unknown side about Vijayakanth And Jayalalithaa Controversy

அன்னமிட்ட கை: விஜயகாந்த் என்றால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று நினைவுக்கு வருவதை போல உதவி, அன்னமிட்ட கை என்பதும் நினைவுக்கு வரும். விஜயகாந்த் ஆஃபிஸ் போனால் போதும் வயிறார சாப்பிட்டுவிட்டு வரலாம் என்பதுதான் 80கள், 90களில் சினிமாவுக்குள் போராடிக்கொண்டிருந்தவர்களின் எண்ண ஓட்டம். அதனாலேயே அவர் மீது பலரும் மரியாதை வைத்திருக்கின்றனர்.

ஓடோடி வரும் கேப்டன்: வெறும் உணவிட்டு உதவி செய்வது மட்டுமின்றி உடல் ரீதியாகவும் பல உதவிகளை, நல்லதை செய்திருக்கிறார் அவர். சிவாஜி இறப்பின்போதுகூட யாருக்கும் அஞ்சாமல் கூட்டத்துக்குள் சென்று அந்தக் கூட்டத்தை அரட்டி அடக்கி வைத்தவர் விஜயகாந்த். அதுதொடர்பான வீடியோக்கூட சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டாகும்.

அச்சம் அச்சமில்லை: சினிமாவில் எப்படி தைரியமாக பல முடிவுகளை எடுத்தாரோ அதேபோல்தான் அரசியல் எண்ட்ரியிலும் அதகளம் செய்தார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் முழு மூச்சாக அரசியல் களத்தில் இருந்தபோது தேமுதிக கட்சியை ஆரம்பித்து முதல் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். பிறகு 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார்.

சம்பவம் செய்த விஜயகாந்த்: அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது யாராலும் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று தனது நாக்கை சட்டப்பேரவையில் துருத்தியது. அது ஜெயலலிதாவுக்கு எதிராக செய்துவிட்டார் என்ற பிம்பம் இத்தனை வருடங்களாக இருந்தது. மேலும் அப்படி அவர் செய்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். ஏனெனில் ஜெவை பார்த்து அப்படி செய்ய அப்போதைக்கு யாரும் இல்லை அல்லது இருந்தவர்களுக்கு தைரியம் இல்லை.

சீக்ரெட் சொன்ன ராதாரவி: இந்நிலையில் அந்த சம்பவம் குறித்த புதிய விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது விஜயகாந்த் அப்படி செய்தபோது நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்தார். அவரும் விஜயகாந்த்தும் மிக மிக நெருங்கிய நண்பர்கள். அந்த சம்பவம் நடந்த அன்று இரவு விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற ராதாராவி, 'ஏன் டா விஜி இப்படி செய்யுற' என கேட்டிருக்கிறார்.

அதற்கு விஜயகாந்த்தோ, 'டேய் நான் ஜெயலலிதாவை பார்த்து அப்படி செய்யலை டா. அந்த அம்மாவுக்கு பின்னாடி ஒருத்தன் இருந்தான். அவன் என் குடும்பத்தை பத்தி பேசிட்டான் டா. அதான் கோபமாகி அப்படி செஞ்சிட்டேன். நான் ஏன் டா அந்த அம்மாவை பார்த்து நாக்கை துருத்த போறேன்' என கேட்டாராம். இதனை ராதாரவி ஒரு மேடையில் பகிர்ந்து, விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துருத்தவில்லை என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X