ராம்கி - நிரோஷா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா ராதிகா?.. செய்யாறு பாலு சொல்றதை கேளுங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த ராம்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் நடிகை நிரோஷா. ஆரம்பத்தில் குடும்பத்தினர் அவர்கள் திருமணத்துக்கு சம்மதிக்காத நிலையில், திருமணம் செய்துக் கொள்ளாமல் இருவரும் ஆரம்பத்தில் இணைந்து வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் திருமணம் செய்துக் கொண்ட இருவரும் இப்போது வரை ஒருவரை ஒருவர் அன்போடு நேசித்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் இளைய மகள் தான் நிரோஷா என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். 52 வயதாகும் நிரோஷா பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் உடன் நடிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது லால் சலாம் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் லால் சலாம் படம் திரைக்கு வருகிறது.

Radhika Sarathkumar opposed for Ramki and Nirosha marriage initially reveals by Cheyyaru Balu

ராதிகாவின் தங்கை நிரோஷா: அக்னி நட்சத்திரம் படத்தில் நடிக்க புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருந்த மணிரத்னம் நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷாவை அந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். தொடர்ந்து கமல்ஹாசனின் சூரசம்ஹாரம், செந்தூரப்பூவே, பாண்டி நாட்டு தங்கம், மருது பாண்டி, பச்சைக்கொடி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் நிரோஷா.

ராம்கியுடன் திருமணம்: 1988ம் ஆண்டு வெளியான செந்தூரப்பூவே படத்தில் ராம்கியுடன் இணைந்து நடித்த நிரோஷா தொடர்ந்து பறவைகள் பலவிதம், இணைந்த கைகள் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தார். இணைந்த கைகள் படத்தில் ராம்கிக்கு ஜோடியாக அல்லாமல் அருண் பாண்டியன் படத்துக்கு நிரோஷா ஜோடியாக நடித்தார். ஆனால், தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், 1995ம் ஆண்டு ராம்கியை திருமணம் செய்துக் கொண்டார் நிரோஷா.

ராதிகா எதிர்ப்பு: ஆரம்பத்தில் ராதிகாவுக்கும் அவரது அம்மா கீதாவுக்கும் ராம்கியை நிரோஷா காதலிப்பது பிடிக்கவில்லை என்றும் இருவரது காதலையும் பிரிக்க ராதிகா பல முயற்சிகளை செய்தார் என்றும் செய்யாறு பாலு தனது சமீபத்திய பேட்டியில் கூறி அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

அப்பவே லிவிங் டுகெதர்: அந்த காலத்திலேயே பிகினி உடையில் நடித்த நிரோஷா லிவிங் டுகெதரையும் அறிமுகப்படுத்தியிருந்தார் என்றும் செய்யாறு பாலு கூறியுள்ளார். ராம்கியும் நிரோஷாவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் தனியாக சில காலம் வசித்து வந்து பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர் என்றும் நிரோஷா, ராம்கியின் காதலை புரிந்துக் கொண்டு ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் காதலை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.

விஜய் டிவி சீரியல்: பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் முடிவுக்கு வந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் சமீபத்தில் தொடங்கியது. அதில் லீடு ரோலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நிரோஷா. சன் டிவியில் வெளியான சின்ன பாப்பா பெரிய பாப்பா, சந்திரகுமாரி, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லால் சலாம் படத்தில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்து வருகிறார். அவரது மனைவியாக நிரோஷா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கணவர் தோளில் சாய்ந்து: தனது கணவர் ராம்கியுடன் போட்டோக்களை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் ராம்கி தோளில் சாய்ந்தபடி நிரோஷா வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. காதலிக்கும் போது எந்தளவுக்கு காதலுடன் இருவரும் இருந்தார்களோ அதே அளவுக்கு காதலுடன் இப்பவும் இருப்பது சிறப்பான விஷயம் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X