Rajinikanth - ரஜினியின் இளமைக்கும், எனர்ஜிக்கும் காரணம் என்ன தெரியுமா?.. உள்ளே இருக்கு பாருங்க
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த்தின் இளமைக்கும், உற்சாகத்துக்கும் காரணம் என்ன என்பது குறித்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.
சினிமாவில் அறிமுகமான சமயத்தில் அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும் பெரும் வெற்றி கண்டுசூப்பர் ஸ்டார் என்ற அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களாக வெற்றிக்கு ஏங்கிகொண்டிருந்த ரஜினிக்கு இந்தப் படம் கம்பேக்காக அமைந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் ஜெயிலர் வெற்றியின் மூலம் அவர் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றும் சிலாகிக்கின்றனர். படம் இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இமயமலை பயணம்: தமிழ்நாடே ஜெயிலருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த சூழலில் ரஜினிகாந்த்தோ ரிலீஸுக்கு சில நாட்கள் முன்னதாக இமயமலை சென்றார். அதுகுறித்து பேசிய அவர், நான்கு வருடங்களுக்கு பிறகு செல்கிறேன் என சிம்ப்பிளாக முடித்துவிட்டார். அதேசமயம் படத்தின் ரிலீஸுக்கு முன்னர் அவர் இமயமலை சென்றால் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகரக்ள் நம்புகின்றனர்.
உற்சாகத்துக்கு என்ன காரணம்: இதற்கிடையே ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் ஸ்டைலும், அழகும், எனர்ஜியும் இன்னும் தலைவரை விட்டு போகல என கூறிவருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அவரது எனர்ஜிக்கு என்ன காரணம் என்பது குறித்து ரஜினியின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
பகதூர் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "ரஜினிகாந்த் அதிகம் தியானம் செய்வார். அடிக்கடி அவர் இமயமலைக்கு சென்று பல முனிவர்களை சந்திப்பார். அவர்கள் இவர் இளமையாக இருக்க சில மருத்துவ தாவரங்களின் வேர்களை கொடுப்பார்கள். அந்த வேரை ஒருமுறை சாப்பிட்டால் போதும் ஒரு வார காலத்திற்கான எனர்ஜியை கொடுக்கும். அதன் காரணமாகத்தான் 73 வயதிலும் 23 வயதுபோல் அவர் இ ருக்கிறார்.

திருவிழாதான்: ரஜினியின் ஒவ்வொரு படமும் திருவிழாதான். அவர் சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஃபோன் செய்து ஜெயிலர் படத்தை பார்த்து விமர்சனம் சொல் என்றார். மற்றவர்கள் எல்லாம் படம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்வார்கள். ஆனால் நான் படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் சொல்வேன். 53 வருடங்களாக நாங்கள் நண்பர்கள். அதனால் நான் அவருக்கு பயப்படுவதில்லை. உள்ள விஷயங்களை உள்ளபடியே தெளிவாக சொல்வேன். அது அவருக்கும் தெரியும், பிடிக்கும்.
நான்கு வருடங்களாக அவர் இமயமலைக்கு போகவில்லை. என்னை அவர் உடன் அழைத்தபோது வடமாநிலங்களில் கனமழை எனவே போக வேண்டாம் என அறிவுறுத்தினேன். ஆனால் அவர் ஒருமுறை முடிவெடுத்தால் அதை செய்துவிடுபவர். எனவே கிளம்பிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











