Rajini - நைட் முழுக்க முழுக்க குடிதான்... ரஜினி பற்றி சீக்ரெட் சொன்ன நண்பர் .. என்ன ஓபனா சொல்லிட்டாரு?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) இரவு முழுவதும் ரஜினிகாந்த் குடிப்பார் என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்று பிறகு சினிமாவில் அறிமுகமானவர். இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஜெயிலர் படம் வெளியானது. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி வசூலை வாரி குவித்தது. இதனால் அடுத்தடுத்த படங்களிலும் அதே வீரியத்துடன் பணியாற்ற ரஜினி தயாராகியிருக்கிறார்.

Raj Bhagadhur Open Talks about Rajinikanths Unknown Side

ராஜ்பகதூர்: ரஜினிகாந்த் சென்னை வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அவரது நண்பர் ராஜ்பகதூர். அவர்தான் ரஜினிக்கு தைரியம் சொல்லி பெங்களூரிலிருந்து சென்னைக்கு வழியனுப்பி வைத்தவர். இந்தச் சூழலில் அவர் ரஜினி குறித்து சில விஷயங்கள் பேசியிருக்கிறார். ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ராஜ்பகதூர், "படையப்பா படப்பிடிப்பை பார்ப்பதற்காக ஒருமுறை சென்றேன். அப்போது நண்பன் என்ற ரீதியில் நடிக்கிறியா என ரஜினி கேட்டார்.

அதெல்லாம் வேண்டாம்: நான் உடனே அய்யோ அதெல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னேன். அதற்கு ரஜினிகாந்த்தோ இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை செய் போதும் என்றார். உடனே எனக்கு மேக்கப்,காஸ்டியூம் உள்ளிட்டவற்றை போட்டார்கள்.அந்தக் காட்சியில் நான் ரஜினியை டா போட்டு பேச வேண்டும். இவனை அரசியலுக்கு வான்னு சொன்னா வர மாட்டேன் என்கிறான் என்ற வசனத்தை பேசுவது போன்ற காட்சி.

டா போடாதீர்கள்: உடனே கே.எஸ்.ரவிக்குமாரோ தயவு செய்து டா போட்டு பேசாதீர்கள். அவர் பெரிய ஸ்டார் அப்படி கூப்பிடுவது சரியாக இருக்காது என்றார். ஆனால் ரஜினியோ இல்லை இல்லை அவன் என்னை டா போட்டுத்தான் பேச வேண்டும் என்று கூறி நீ அப்படியே பேசுடா என்றான்.அதனையடுத்துதான் வாடா போடா என்று அந்தக் காட்சியில் பேசினேன்.

Raj Bhagadhur Open Talks about Rajinikanths Unknown Side

இரவு முழுக்க குடி: அவன் பெரும்பாலும் நன்றாக நடித்துவிடுவான். படத்தின் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் காட்டியிருக்கிறாய் என்று நேரடியாக சொல்லிவிடுவேன். அவன் நடித்த திரைப்படத்திலேயே பாட்ஷா திரைப்படம் மெகா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்போதெல்லாம் என்னுடைய வீட்டுக்கு மாறு வேஷத்தில் வருவான். இரண்டு பேரும் இரவு நன்றாக குடிப்போம். நிறைய அரட்டை அடிப்போம். காலையில் சென்றுவிடுவான்.

விமர்சனம்: அவனுடைய படம் வெளியாகும்போதெல்லாம் முதல் காட்சி பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று அவனுக்கு நான் சொல்ல வேண்டும். அவர் அதற்காக காத்திருப்பான். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தலைவா என்றுதான் பேசிக்கொள்வோம். கடைசியாக வெளியான ஜெயிலர் படத்தையும் முதல் காட்சி பார்த்துவிட்டு நிச்சயம் இந்தப் படம் பெரிய வசூலை குவிக்கும் என்று சொன்னேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X