எஸ்.எஸ்.சந்திரனுடன் வந்த சண்டை.. கவுண்டமணி என்ன செஞ்சார் தெரியுமா?.. ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்
சென்னை: கவுண்டமணி தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துவருகிறார். எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் அவருக்கும், நடிகர் எஸ்.எஸ். சந்திரனுக்கும் நடந்த சண்டை குறித்து இப்போது தெரியவந்திருக்கிறது.
உடுமலைப்பேட்டையை சொந்த ஊராக கொண்ட கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அவர் ஒரு நாடக கம்பெனியில் இணைந்தார். அங்கிருந்தபடி சினிமாவுக்கும் அவர் முயற்சி செய்ய பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் அவர் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. டைமிங்கில் கவுண்ட்டர் அடிப்பதால் சுப்பிரமணி கவுண்டமணி ஆனார். முதல் படத்திலேயே அவரது நடிப்பும், டைமிங்கும் ரசிகர்களை கவர ஆரம்பித்தன.

கவுண்டமணி - செந்தில் காம்போ: எவர்க்ரீன் காமெடி காம்போ கவுண்டமணியும், செந்திலும் ஆவர். பல நூறு படங்களில் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கின்றனர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் என அவர்கள் அதகளம் செய்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் பெரிது. ஒருகட்டத்தில் கவுண்டமணி இல்லாமல் செந்தில் இல்லை செந்தில் இல்லாமல் கவுண்டமணி இல்லை என்ற நிலையே திரைத்துறையில் நீடித்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினார்கள். கவுண்டமணி நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தபோது மீண்டும் நடிக்க வர வேண்டுமென்று அவருக்கு நீண்ட கடிதத்தையும் செந்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.
விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் என்று சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.

யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். 'ஏன் ப்பா எல்லோரும் நடிக்க வந்துட்டா யார்தான் படம் பார்க்குறது' என்று சந்தானத்திடம் ஒரு முறை கவுண்ட்டர் அடித்திருக்கிறார் கவுண்டமணி. அதேபோல், 'நாய்க்கு என்ன பெயர் வைப்பது அதுக்கு பேர் நாய்தான்', நடிகர் சங்க பெயர் பற்றிய ஒரு கேள்விக்கு 'நடிகர் சங்கம் என்று வையுங்கள்' என்ற அவரது ஆஃப் கேமரா கவுண்ட்டர்களும் ரகளையாக இருப்பவை.
ராஜகோபால் பேட்டி: இப்போது அவர் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் வசனகர்த்தாவும், காமெடி ட்ராக் எழுதுபவருமான ராஜகோபால் கவுண்டமணி - எஸ்.எஸ்.சந்திரன் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், "பெரிய மருது படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி கட்டிலில் அமர்ந்திருப்பார். அப்போது எஸ்.எஸ்.சந்திரன் உள்ளே வரும்போது, அம்மா, தாயே, மகாலட்சுமி என்று அழைத்துக்கொண்டே வருவார். உடனே கவுண்டமணியோ, மகாலட்சுமி பிச்சைக்காரன் வந்திருக்கிறான் சாப்பாடு போடு என்று சொல்லும்படி காட்சி இருந்தது.
கரடி சட்டை: உள்ளே வரும்போதே கரடிக்கு சட்டை போட்ட மாதிரி யாரு உட்கார்ந்திருப்பது என்றும் சொல்வார். ஆனால் எஸ்.எஸ்.சந்திரனோ மாப்பிள்ளை நான் என்று சொல்வது போல் எழுதிக்கொடுத்தேன். அதனை கேட்டவுடன் ஷூட்டிங்கில் இருந்தவர்கள் சிரித்தார்கள். இதே இருக்கலாம் என்று நினைத்தோம். .ஆனால் கவுண்டமணி கோபமாக கட் என்று சொல்லிவிட்டு என்னிடம் காமெடி பேப்பரை வாங்கினார்.
கோபப்பட்ட கவுண்டமணி: அந்த மாதிரி எதுவும் இல்லை; சந்திரனாக சொன்னதுதான் அது என சொல்லிவிட்டேன். மேலும் எல்லோரும் சிரிக்கிறார்கள் என்றும் சொன்னேன். ஆனால் கவுண்டமணியோ, சிரிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. நான் யாருனே தெரியாமல் பிச்சைக்காரன் என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அவர் வேண்டுமென்றே டயலாக்கில் இல்லாததை எப்படி சொல்லலாம் என்று கோபித்துக்கொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











