Rajini: உதவியை மறந்து நோ சொன்ன சத்யராஜ்... சிவாஜியில் வில்லனான சுமன்... ரஜினியின் மாஸ்டர் மூவ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து கம்பேக் கொடுத்தார் நடிகர் சுமன்.

முன்னதாக சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இயக்குநர் ஷங்கர்.
ஆனால், அவர் மறுத்ததால் தான் அவருக்குப் பதிலாக சுமன் நடித்ததாக சொல்லப்படுகிறது.
சிவாஜியில் ரஜினிக்கு வில்லனான சுமன்
சூப்பர் ஸ்டார் ரஜினி - இயக்குநர் ஷங்கர் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் சிவாஜி. ஏவிஎம் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ரஜினியுடன் ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்த சிவாஜி படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சுமன் நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது சிவாஜி. முன்னதாக இந்த கேரக்டரில் சத்யராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் ஷங்கரும் ரஜினியும் விரும்பியுள்ளனர். ஆனால், சத்யராஜ் வில்லனாக நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். சத்யராஜ்ஜின் ஆரம்ப காலத்தில் அவருக்கு தனது படங்களில் ந்டிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் ரஜினி.
ரஜினியுடன் ஸ்ரீராகவேந்தர், நான் மகான் அல்ல, பாயும் புலி, மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ். ரஜினியுடன் இணைந்து நடித்ததில் மிஸ்டர் பாரத் திரைப்படம் தான் சத்யராஜுக்கு செம்ம ஹிட் கொடுத்தது. ஆனாலும், இதையெல்லாம் மறந்துவிட்டு ரஜினிக்கு வில்லனாக நடிக்க முடியாது என்றாராம் சத்யராஜ். இன்னும் பல நடிகர்களிடம் பேசிப் பார்த்த இயக்குநர் ஷங்கர், இறுதியாக சுமனை சிவாஜி படத்தில் நடிக்க வைத்தார்.
சுமன் கமிட்டானதும் சங்கர் அவரை அழைத்து கெட்டப் பற்றி பேசியுள்ளார். பின்னர் அந்த ஆதிசேஷன் கேரக்டருக்கு சுமன் முகம் சுத்தமாக செட்டே ஆகவில்லையாம். ஆனால், சுமனின் ஆதிசேஷன் கேரக்டரை செம்ம மாஸ்ஸாக உருவாக்க வேண்டும் என ஷங்கரிடம் கூறியுள்ளார் ரஜினி. இதனால் வில்லன் முகத்துக்காக நடிகர் சுமனை ஒரு டென்ட்டிஸ்ட்டிடம் அழைத்துச் சென்றுள்ளார் ஷங்கர்.
அங்கு ஒரு பல் செட்டை வடிவமைத்து அதனை சுமனுக்கு செட் செய்ததும் வில்லன் ஆதிசேஷனாக மாறுகிறார். தன்னை விட அதிகமாக பேசப்பட வேண்டும் என ரஜினி சொன்னதால் சுமன் என்பதை விட, ஆதிசேஷன் தான் அப்படத்தில் பெரிதாக தெரிவார். அதேபோல் பஞ்சு சுப்புவின் பின்னணிக் குரலும் சுமனுக்கு பக்காவாக பொருந்தியது. ரஜினி சொன்னது மாதிரியே சுமன் சிவாஜி பட வெற்றிக்குப்பிறகு பெரிய ரவுண்ட் வந்தார். விஜய், அஜித், தனுஷ், மம்முட்டி, மோகன்லால் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆதிசேஷன்னா பொட்டு வச்சிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருப்பான்னு நினச்சியா?. ஆதிடா.. காசிமேடு ஆதி" என சுமன் பேசிய வசனம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட். சத்யராஜ் நோ சொன்னதால் சிவாஜியில் வில்லனாகும் வாய்ப்பு சுமனுக்கு கிடைத்தது. இதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டது தான் சிறப்பான சம்பவம்.


Click it and Unblock the Notifications











