Rajini: ரஜினிக்கு லுங்கி டான்ஸ் பாடலை ட்ரிபியூட் செய்த இயக்குநர்... என்ன காரணம்ன்னு தெரியுமா?
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ்.
ரோஹித் ஷெட்டி இயக்கிய இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வரை வசூலித்தது.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக 'லுங்கி டான்ஸ்' என்ற பாடலை ட்ரிபியூட் செய்திருந்தார் ரோஹித் ஷெட்டி.
சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்தப் பாடல் இடம்பெற்றதற்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

ரஜினிக்காக லுங்கி டான்ஸ் பாடல்
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு பாடல் ட்ரிபியூட் செய்யப்பட்டிருந்தது. ரகளையான இசையில் வெளியான இப்பாடலை ரஜினி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். ஷாருக்கான், தீபிகா படுகோன் இருவரும் இப்பாடலுக்கு நடனமாடி மாஸ் காட்டியிருந்தனர்.
சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தான், ரஜினிக்காக இந்தப் பாடலை ட்ரிபியூட் செய்துள்ளார். அதற்கு ஷாருக்கானும் பெருந்தன்மையாக சம்மதம் தெரிவித்தது தான் இங்கே முக்கியமானது. ஆனால், ரஜினிக்கு பெரிதாக அறிமுகம் இல்லாத ரோஹித் ஷெட்டி, இப்பாடலை ட்ரிபியூட் செய்ய ஒரு காரணம் இருக்கிறதாம். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, 1980-களில் பில்லா படத்தின் வெற்றிக்குப் பின்னர், மற்ற மொழிகளில் ரஜினி நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டன. அதன்படி, இன்ஸ்பெக்டர் ரஜினி, ரௌடி ரஜினி, சகோதர சவால், டைகர், மின்னல், ராம் ராபர்ட் ரஹீம் என பல படங்கள் தமிழிலும் ஹிட் அடித்தன. இதில், 'இன்ஸ்பெக்டர் ரஜினி' என்ற திரைப்படம், ஒரிஜினலாக கன்னடத்தில் 'கில்லாடி கிட்டு' என்ற பெயரில் வெளியானது.
இதில் கிட்டுவாக விஷ்ணுவர்த்தன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார். இந்தப் படத்தின் இன்ட்ரோ சீனில் ரஜினிக்கு ஒரு சண்டைக் காட்சி வரும். அதில் மொட்டை தலையுடன் வில்லனாக மிரட்டியிருப்பார் எம்பி. ஷெட்டி என்ற ஸ்டண்ட் மாஸ்டர். அவருக்கும் ரஜினிக்கும் இடையே நடக்கும் அந்த சண்டைக் காட்சி செம்ம ஹிட் அடித்தது. பில்லாவின் இந்தி ஒரிஜினல் வெர்ஷனான டான் படத்தின் சண்டைக்காட்சிகள் ஷெட்டி அமைத்தது தான்.

இவரது மகன் தான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் செகண்ட் ஹீரோ ரோலில் நடித்தவர் தான் எம்பி ஷெட்டி. அவரது மகனான ரோஹித் ஷெட்டி, பின்னாளில் ரஜினிக்காக தனது படத்தில் ட்ரிபியூட் செய்துள்ளார். அப்படி உருவான பாடல் தான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற 'லுங்கி டான்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற லிங்கா ஷுட்டிங்கில் ரஜினியை பார்க்கச் சென்றுள்ளார் ரோஹித் ஷெட்டி. அவரைப் பார்த்ததும் எழுந்து ஓடி சென்று கை குலுக்குகிறார் ரஜினி. அதோடு "நான் உங்கள் படங்களின் ரசிகன்... உங்கள் தலைவா ட்ரிபியூட் பாடல் அருமையாக இருந்தது" என பாராட்டுகிறார். அதனைக் கேட்ட இயக்குநர் ரோஹித் ஷெட்டி ரொம்பவே மகிழ்ச்சியோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











