Rajini Kamal: “ரஜினியிடம் ஹீரோயிசம் மட்டும் தான் இருக்கு... ஆனால், கமல் அதுக்கும் மேல”: சேரன் ஓபன்!

சென்னை: சேரன் நடித்துள்ள தமிழ்க்குடிமகன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் பெரியாருக்கு எதிரான வசனம் பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் சேரன்.

இந்த விவகாரம் குறித்து சேரனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இன்னொரு பக்கம் தமிழ்க்குடிமகன் ப்ரோமோஷன் பேட்டியில், ரஜினியை விட கமல் தான் முன்னோடி என மனம் திறந்து கூறியுள்ளார் சேரன்.

 Rajini Kamal: Director Cheran opined that Kamal is more genius than Rajini

ரஜினியை விட கமல் தான் ஜீனியஸ்: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சேரன், தனது அடுத்த படத்தை கிச்சா சுதீப் நடிப்பில் இயக்கவுள்ளார். முன்னதாக அவர் நடித்துள்ள தமிழ்க்குடிமகன் என்ற படம் இந்த வாரம் வெளியானது. இதில், பெரியாருக்கு எதிரான வசனங்களை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் சேரன். இதுபற்றி ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சேரனிடம் கேள்வி எழுப்பி வருவது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

.jpg tamil.filmibeat.com}

இதனிடையே இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் ஒப்பிட்டு சேரன் பேசியதும் ட்ரெண்டாகி வருகிறது. கமலின் மகாநதி படத்தில் சேரன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். முதலில் அந்த அனுபவம் பற்றிய பேசிய சேரன், "மகாநதி படத்தில் பணிபுரிந்த போது, கமல் சாரின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள அவ்வளவு விஷயங்கள் உள்ளன" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தங்களது மாணவ பருவத்தில் சிவாஜி தான் எங்களுக்குப் பிடித்த நடிகர். ஆனால், அதன் பின்னர் அந்த இடத்தை கமல்ஹாசன் பிடித்துவிட்டார். கமல் சார் போல ஸ்டைலாக ட்ரஸ் பண்ணிக்கணும், ஹேர் கட் பண்ணிக்கணும், மைக்கை தூக்கி போட்டு பிடிக்கணும் என ஆசை இருந்தது. அப்போது ரஜினியையும் பிடிக்கும் என்றாலும், அவர் மாஸ் ஹீரோவாக மட்டுமே இருந்தார்" என சேரன் கூறியுள்ளார்.

 Rajini Kamal: Director Cheran opined that Kamal is more genius than Rajini

ஆனால், "கமல் சார் எல்லாத்துக்குமே ஒரு முன்னோடியாக இருந்தார். அவரின் நடிப்பில் எதார்த்தம் இருக்கும், நிறைய தெரிந்துகொள்ளலாம்" என சேரன் பெருமையாக பேசியுள்ளார். சமீப காலங்களில் ரஜினியை விடவும் கமல்ஹாசன் குறித்து பிரபலங்கள் பலரும் பாசிட்டிவாக பேசி வருவது, அவரது ரசிகர்களிடையே வைப் கொடுத்துள்ளது. ரஜினி இளம் விஜய், சிவகார்த்திகேயன் போன்றோரிடம் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்காக சண்டைப் போட்டு வருகிறார்.

ஆனால், கமல்ஹாசன் தான் உலகநாயகன் என்ற டைட்டிலுக்கு ஏற்ப, அடுத்தடுத்த லெவலுக்கு சென்றுகொண்டே இருக்கிறார். சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு பலபேர் கூட போட்டிக்கு வருவார்கள், ஆனால், கமலின் உலகநாயகன் டைட்டிலில் அவரை விட்டால் வேறு யாரும் கிடையாது என புகழ் பாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X