Rajini Kamal: “கமல்ஹாசன் சொன்னது எனக்கு புரியும்..” மேடையில் சூடான சூப்பர் ஸ்டார் ரஜினி!

சென்னை: கே பாலச்சந்தரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து சினிமாவில் மாஸ் காட்டியவர்களில் ரஜினியும் கமலும் முக்கியமானவர்கள்.

ஆரம்பகாலங்களில் பல படங்களில் இணைந்து நடித்த ரஜினியும் கமலும், அதன்பின்னர் தனித்தனியாக நடித்து வருகின்றனர்.

ஆனாலும் இருவருமே இப்போது வரை மிக நெருங்கிய நண்பர்களாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல்ஹாசன் குறித்து ரஜினி பேசிய வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 Rajini Kamal: Rajinikanth praised Kamal Haasans knowledge and wisdom

கமல் சொல்றது ரஜினிக்கு புரியுது: கோலிவுட்டின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்கள் என்றால் அது ரஜினியும் கமலும் தான். கே பாலச்சந்தரின் படங்களில் நடிக்கும் போது நண்பர்களாக பழகிய இருவரும், இப்போது வரை நெருங்கிய நட்பில் இருந்து வருகின்றனர். கமல் முன்னணி ஹீரோவாக நடித்து வந்த போது, ரஜினி செகண்ட் ஹீரோ ரோலில் அதிகம் நடித்தார். அதன் பின்னர் கமல் தான், ரஜினியின் எதிர்காலத்தை மனதில் வைத்து சேர்ந்து நடிக்க வேண்டாம் என்றாராம்.

இதனை ரஜினியே பல மேடைகளில் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் பாலச்சந்தர் சார் அடிக்கடி கமலின் நடிப்பை பார்த்து கற்றுக்கொள் என தன்னை திட்டியுள்ளதாகவும் ரஜினி மனம் திறந்துள்ளார். கடந்தாண்டு நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கூட, ரஜினியும் கமலும் ஒரே மேடையில் நின்று ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசியது வைரலானது.

 Rajini Kamal: Rajinikanth praised Kamal Haasans knowledge and wisdom

அப்போது மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் நடிக்க, கமலிடம் தான் அட்வைஸ் கேட்டதாகவும் ரஜினி கூறியிருந்தார். இதேபோல், கமலும் ரஜினி குறித்தும் அவரது வளர்ச்சி பற்றியும் பல மேடைகளில் பாசிட்டிவாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசியுள்ளார். சமீபத்தில் கூட தான் ரிஸ்க் எடுத்து நடித்து பேர் வாங்குகிறேன் என்றால், ரஜினி அதனை சிம்பிளாக நடித்து மாஸ் காட்டி விடுகிறார். அதுதான் அவரது தனித்துவம் என கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், கமல் குறித்து ரஜினி நெகிழ்ச்சியாக பேசிய வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கமல்ஹாசனுக்காக நடந்த பாராட்டு விழாவில் பேசிய ரஜினி, கமலிடம் இருக்கும் அறிவு பசியை பார்த்து நானே பலமுறை வியந்துள்ளேன் எனக் கூறியுள்ளார். மேலும், ஒரு விஷயம் குறித்து அவரிடம் சந்தேகம் கேட்டால், அது என்ன என்றும், அதுபற்றி இன்னும் யாரெல்லாம் என்னவெல்லாம் சொல்லிருக்காங்கன்னு தேடித் தேடி தெரிந்துக்கொள்வார்.

 Rajini Kamal: Rajinikanth praised Kamal Haasans knowledge and wisdom

அப்படி கமல் தான் தெரிந்துகொண்ட அனைத்தையும் மக்களுக்கு சொல்ல வேண்டும் எனத் துடிக்கிறார். ஆனால், பலரும் கமல் சொல்வது புரியவில்லை என சொல்கின்றனர். கமல் சொல்ல வருவது ரஜினிக்கே புரியும் போது, மற்றவர்களுக்கு எப்படி புரியாமல் போகும் என ரஜினி ஆதங்கத்துடன் பேசுகிறார். இந்த வீடியோவை கமல் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X