நடுரோட்டில் பேண்ட்டை கழற்றிய ரஜினிகாந்த்.. அதிர்ச்சியோடு சொன்ன நடிகர்.. இப்படியும் நடந்ததா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் 2, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், கமலுடன் நடிக்கும் KHXRK ஆகிய திரைப்படங்கள் வரவிருக்கின்றன. இந்த மூன்று படங்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கண்டிப்பாக வேட்டையன், கூலி ஆகிய படங்களில் சந்தித்த பின்னடைவை இதில் அவர் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரஜினி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடித்துவருகிறார். எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் அவர்களுக்கும் சரியான போட்டியை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இத்தனை வெற்றிகளுக்கும் ஒரே காரணம் அவரது டெடிகேஷன் மட்டும்தான். எவ்வளவோ உயரங்களுக்கு சென்றாலும் இப்போது நடிக்கும் படத்தையும் தன்னுடைய முதல் படமாக நினைத்து நடிப்பதால்தான் அவரால் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்க முடிகிறது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

Rajini Sir Was Changing in Public Bose Venkat Reveals Rajinikanth s Simplicity on Sivaji Sets
Photo Credit:

தோல்வி சந்தித்தாலும்: ரஜினிகாந்த் தோல்விகளையே சந்திக்காதவரா என்றால் அதெல்லாம் இல்லை. ஆனால் அந்த தோல்விகளிலிருந்து மிக விரைவாகவே மீண்டு விடும் வல்லமை படைத்தவர் அவர். பாபா தோல்வியடைந்தபோது இனிமேல் ரஜினி அவ்வளவுதான் என்றார்கள்; அடுத்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. தர்பார், அண்ணாத்த தோல்வியடைந்தபோது இனி ரஜினி கரியர் காலி என்றார்கள்; அடுத்து அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

Also Read
Parimala & Co Day 1 Box Office - பரிமளா & கோ முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
Parimala & Co Day 1 Box Office - பரிமளா & கோ முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?

இப்போதும் நடக்கும்: கடைசியாக அவர் நடித்த வேட்டையன் திரைப்படம் சுமார் ஹிட்டையும், கூலி படுதோல்வியையும் சந்தித்தன. ஆனால் இப்போது சந்தித்திருக்கும் தோல்விகளை அடுத்து வரவிருக்கும் மூன்று படங்களில் சரி செய்துவிடுவார் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. அப்படித்தான் கடந்த கால வரலாறும் இருக்கிறது. ரஜினியின் இந்த நிலைமைக்கு காரணம் முழுக்க முழுக்க அவரது உழைப்பும், டெடிகேஷனும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈகோவே கிடையாது: அத்தனைக்கும் மேலாக அவரிடம் ஈகோ என்பதையே பார்க்க முடியாது. நல்ல படம் ரிலீஸாகிவிட்டால் அந்த இயக்குநரை உடனடியாக ஃபோனில் தொடர்புகொண்டோ அல்லது நேரில் அழைத்தோ பாராட்டு தெரிவிப்பார். சமயங்களில் தங்க சங்கிலியும் பரிசு அளிப்பதுண்டு. அதேபோல் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமான ஒவ்வொருவரையும் இன்னமும் தனது நினைவிலிருந்து விலக்காமல் வைத்திருக்கிறார். அப்படித்தான் கலைஞானத்துக்கு வீடு கட்டிக்கொடுத்தார்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அவரை பார்த்தால் சூப்பர் ஸ்டார் என்றே தெரியாது என உடன் பணியாற்றியவர்கள் சொல்லியதுண்டு. இந்நிலையில் சிவாஜி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை நடிகர் போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "சிவாஜி படத்திற்காகத்தான் நான் வாய்ப்பு தேடி அலைந்தேன். படத்தில் நடித்தபோது ஒருமுறை காஸ்ட்யூம் மாற்றிக்கொள்ளுங்கள் என பொது இடத்தில் வைத்து கொடுத்தார்கள். உடை மாற்றிக்கொள்வதற்கு எந்த மறைவான இடமும் இல்லை.

இடம் எங்கே?: உடனே நான் அந்த காஸ்ட்யூமரிடம், என்ன சார் நீங்கள் ஏதாவது மறைவாக ஒரு இடம் கொடுங்கள் என கேட்டேன். அதற்கு அவரோ, 'சார் சார் ஷாட் எடுக்குறாங்க சார் மாற்றிக்கொள்ளுங்கள் சார்' என சொன்னார். பின்னால் திரும்பி பார்த்தால் பப்ளிக்கில் ரஜினி சார் பேண்ட்டை கழற்றி மாற்றிக்கொண்டிருந்தார். என்னை செருப்பால் அடித்தது மாதிரி இருந்தது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X