Rajinikanth: என்னை கட்டிப்பிடிக்கும் போது 'ரஜினியோட ரியாக்‌ஷன' பார்க்கணுமே... ஷோபனா சொன்ன சீக்ரெட்!

சென்னை: 1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷோபனா.

நடிகையாக மட்டும் இல்லாமல் மிகச் சிறந்த கிளாசிக் டான்ஸராகவும் பிரபலமானவர்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவா, தளபதி, கோச்சடையான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சிவா படத்தில் ரஜினியுடன் நடித்த ரகளையான அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

 Rajinikanth: Actress Shobana shares her experience of acting with Rajinikanth

ரஜினியோட ரியாக்‌ஷன் - ஷோபனா ஓபன் டாக்: 1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்களில் நடிகை ஷோபனாவும் ஒருவர். இது நம்ம ஆளு, பாட்டுக்கு ஒரு தலைவன், சிவா, வாத்தியார் வீட்டு பிள்ளை, தளபதி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகையாக மட்டும் இல்லாமல் சிறந்த பரதநாட்டிய டான்ஸராகவும் திரையுலகில் பிரபலமானவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷோபனாவுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு.. இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ரஜினியுடன் சிவா படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார் ஷோபனா. அதில், சிவா படத்திற்காக மழையில் ரஜினி சாருடன் நடனமாடுவது போல ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

 Rajinikanth: Actress Shobana shares her experience of acting with Rajinikanth

இரு விழியின் வழியே எனத் தொடங்கும் அந்த பாடலில் வெள்ளை சேலையில் ஆட வேண்டியது இருந்ததாம். அந்த சேலை ரொம்ப ட்ரான்ஸ்பரண்ட்டாக இருந்தால், இதை எப்படி கட்டுவது என குழப்பத்தில் இருந்ததாகக் கூறியுள்ளார். முக்கியமாக உள்ளே போடவும் அவரிடம் எதுவுமே இல்லையாம். வீட்டிற்கும் சென்று துணிகள் எடுத்து வர முடியாது என்பதால், ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த பிளாஸ்டிக் டேபிள் கிளாத்தை கட்டிக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், மழையில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், ரஜினி சார் அவரை கட்டிப்பிடிப்பது போல காட்சி இருந்ததாம். அப்போது ஷோபனா உள்ளே போட்டிருந்த ப்ளாஸ்டிக்கில் இருந்து சடசடவென சத்தம் வந்துள்ளது. ஆனால், ரஜினி சாருக்கு அந்த சத்தம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. அப்போது அவரது முகத்தில் வந்த ரியாக்‌ஷனை இப்போது நினைத்தாலும் மறக்க முடியவில்லை என்றுள்ளார்.

 Rajinikanth: Actress Shobana shares her experience of acting with Rajinikanth

ஆனால், அதன் பின்னர் ரஜினி அதை கண்டுபிடித்து விட்டதாகவும், இருப்பினும் அவர் வெளியே சொல்லவே இல்லை. இன்றுவரை இந்த சம்பவம் எவிஎம் நிறுவனத்துக்கும் தெரியாது எனக் கூறியுள்ளார். மேலும், இது நம்ம ஆளு படம் பண்ணும் போது, நான் ஆடிய நடனங்கள் எனக்கு கவர்ச்சியாக தெரியவில்லை. ஆனால், அப்போது அது கவர்ச்சியாக இருந்ததாக பலரும் விமர்சித்தார்கள். பாக்யராஜ், பிரியதர்ஷன் இருவருமே அற்புதமானவர்கள் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X