Rajinikanth: விஜயகாந்த் படம் கூட என் படம் போட்டிப் போட முடியல... உண்மையை ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் இருவருமே 1990களில் டாப் ஹீரோக்களாக வலம் வந்தனர்.

இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், திரைக்குப் பின்னால் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், 1992ம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் மன்னன், விஜயகாந்தின் சின்ன கவுண்டர் படங்கள் ஒன்றாக வெளியாகியுள்ளன.

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தாலும், ரஜினி சொன்ன தீர்ப்பு இயக்குநர் ஆர்வி உதயகுமாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 Rajinikanth admits that Vijayakanth starrer Chinna Gounder beat Mannan film

உண்மையை ஒப்புக்கொண்ட ரஜினி:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் இருவருமே 90களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர்கள். இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் போட்டிப் போட்டுள்ளன. இந்நிலையில், 1992ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரஜினியின் மன்னன், விஜயகாந்தின் சின்ன கவுண்டர் படங்கள் ஒரேநாளில் ரிலீஸானது.

இதில், ரஜினியின் மன்னன் படத்தை பி வாசு இயக்கியிருந்தார். கன்னடத்தில் ஹிட் அடித்த அனுரக அரலிது என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக மன்னன் உருவாகியிருந்தது. ரஜினியுடன் விஜயசாந்தி, குஷ்பூ, கவுண்டமணி, விசு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமர்சியல் படமாக உருவான மன்னன், ரஜினி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதேபோல், விஜயகாந்தின் சின்ன கவுண்டர் படம் பக்கா வில்லேஜ் கான்செப்ட்டில் உருவாகியிருந்தது. 1988ம் ஆண்டு வெளியான உரிமை கீதம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்வி உதயகுமார், சின்ன கவுண்டர் படத்தையும் இயக்கியிருந்தார். விஜயகாந்துடன் சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், சலீம் கவுஸ் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

அதிகமான சென்டிமெண்ட் காட்சிகளுடன் வெளியான சின்ன கவுண்டர் படத்துக்கு பெண்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூலில் மன்னன் படத்தை விட சின்ன கவுண்டர் தான் முன்னிலையில் இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து இதுகுறித்து ரஜினியே இயக்குநர் ஆர்வி உதயகுமாரிடம் போனில் விசாரித்துள்ளார்.

 Rajinikanth admits that Vijayakanth starrer Chinna Gounder beat Mannan film

இதுகுறித்து இயக்குநர் ஆர்வி உதயகுமார் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், மன்னன், சின்ன கவுண்டர் படங்கள் ஒரேநாளில் வெளியாகின. அப்போது ஒருநாள் ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து 'என்ன உதயகுமார் எப்படி போய்ட்டு இருக்கு என கேட்டார்.' அதற்கு நான் மன்னன் தான் நம்பர் 1 என்றேன், ஆனால் அவரோ இல்லை சின்ன கவுண்டர் தான் நம்பர் 1, விஜயகாந்த் படத்துடன் மன்னன் போட்டிப் போட முடியவில்லையே என்றார்.

மேலும் எல்லா திரையரங்குகளிலும் விசாரித்துவிட்டு தான் இதை சொல்வதாகவும் ரஜினி கூறினார். இதனைக் கேட்டு நானே வியந்துவிட்டேன், அதன் பின்னர் தான் எங்கள் கூட்டணியில் எஜமான் திரைப்படம் உருவானதாக இயக்குநர் ஆர்வி உதயகுமார் தெரிவித்துள்ளார். 1993ம் ஆண்டு வெளியான எஜமான் திரைப்படம் ரஜினிக்கு மிகப் பெரிய வெற்றியை பரிசாக கொடுத்தது.

கிழக்கு வாசல், பொன்னுமணி, நந்தவனத் தேரு, சுபாஷ், கற்க கசடற உள்ளிட்ட மேலும் பல படங்களையும் இயக்கியுள்ளார் ஆர்வி உதயகுமார். அவரது இயக்கத்தில் இறுதியாக மிஸ்டர் ராஸ்கல் என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது. இது தமிழில் வெளியான திருட்டுப் பயலே படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X