Rajinikanth - அப்படி மட்டும் பண்ணாதீங்க.. சந்தானத்துக்கு அட்வைஸ் செய்த ரஜினிகாந்த்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) எந்திரன் படத்தின் ஷூட்டிங்கின்போது சந்தானத்துக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

லொள்ளு சபாவில் நடித்து புகழ்பெற்ற சந்தானம் மன்மதன் படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட சந்தானம் தனது காமெடி திறமையை காண்பித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். குறிப்பாக வடிவேலு கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தபோது ஏற்பட்ட வெற்றிடத்தை சந்தானம் மட்டும்தான் நிரப்பினார்.

Rajinikanth Advices To Santhanam At Enthiran Shooting Spot

பல படங்கள்: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, வீரம், பில்லா, என்றென்றும் புன்னகை, பொல்லாதவன், குசேலன் என பல படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் அவரது டைமிங் கவுண்ட்டர்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக சந்தானம் இல்லாத படம் இல்லை என்ற நிலைமை உருவானது.

விமர்சனங்கள்: கவுண்டமணியின் ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தார். அந்த ஃபார்முலா சக்சஸும் ஆனது. ஆனால் எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தது. சந்தானம் உருவ கேலி செய்கிறார் என்று பலர் ஓபனாகவே பேசினர். அதிலும் என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு பெண்ணிடம் சந்தானம் அடித்த கவுண்ட்டருக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Advices To Santhanam At Enthiran Shooting Spot

எந்திரன்: சந்தானம் ரஜிகாந்த்தின் தீவிர ரசிகர். பல்லாவரத்தில் தனது சிறு வயதில் ரஜினியின் படங்கள் ரிலீஸானால் முதல்நாளே தியேட்டருக்கு சென்று விசிலடித்து அதகளம் செய்து படம் பார்த்தவர். அப்படிப்பட்ட சந்தானம் ரஜினியுடன் குசேலன், எந்திரன், லிங்கா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் எந்திரன் ஷூட்டிங்கின்போது சந்தானத்துக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

என்ன செய்தார்: அதாவது எந்திரன் ஷூட்டிங்கில் சந்தானத்தின் கவுண்ட்டர்களை ரஜினிகாந்த் ரொம்பவே ரசித்தாராம். அதுமட்டுமின்ரி அதை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்லி ரசித்திருக்கிறார். இது சந்தானத்துக்கு ரொம்பவே பூரிப்பாகிவிட்டதாம். அந்த சமயத்தில் நீங்கள் நன்றாக காமெடி செய்கிறீர்கள். உங்களது டைமிங் கவுண்ட்டர்களும் சூப்பரா இருக்கு. ஆனால் மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி மட்டும் காமெடி செய்துவிடாதீர்கள் என்றாராம். இதன் பிறகுதான் அந்த ஸ்டைல் காமெடியின் தீவிரத்தை சந்தானம் குறைத்துக்கொண்டாராம்.

Rajinikanth Advices To Santhanam At Enthiran Shooting Spot

ஹீரோ சந்தானம்: சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் ஹீரோவாகவே நடித்துவருகிறார். ஆனாலும் ஒரு படம்கூட சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு அமையவில்லை. இந்தச் சூழலில் அவர் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.படம் கடந்த 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்துக்கு பிறகு தனது சம்பளம் 8 கோடி ரூபாயாக சந்தானம் உயர்த்திவிட்டார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X