ரஜினிகாந்த் உள்ளிட்ட 3 சூப்பர்ஸ்டார்கள்.. பிரம்மாண்ட பட்ஜெட்.. ஆனாலும் பயங்கர ஃபிளாப் கொடுத்த படம்!
சென்னை: ஆயிரம் கோடிக்கு மேல் அவதார் 2வே எடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான். சிய இயக்குநர்கள் மொக்கைப் படங்களை எடுத்தாலும் ஹீரோக்களை வைத்து பில்டப் பண்ணி பாக்ஸ் ஆபிஸ் வசூலை தேற்றி விடுவார்கள். இந்த ஆண்டில் லியோ, சலார் எல்லாம் வசூல் செய்ததே அது மாதிரி.
ஆனால், சில படங்கள் என்னதான் பில்டப் செய்தாலும் ஆதிபுருஷ் ஃபிளாப் ஆனதை போல ராமாயண கதையே இருந்தும் பிரபாஸ் நடித்தும் வாய்ப்பில்லை ராஜா என்கிற கதை தான்.

அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்னதாக ரஜினிகாந்த் உள்ளிட்ட 3 சூப்பர்ஸ்டார்கள் நடித்து தயாரிப்பாளரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்ட வரலாற்று சிறப்புமிக்க ஃபிளாப் படம் குறித்து தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
இந்தியாவின் மிகப்பெரிய தோல்விப் படம்: 30 ஆண்டுகளுக்கு முன்பு 1988ம் ஆண்டு வி. ரவிச்சந்திரன் தயாரித்து இயக்கிய படம் தான் சாந்தி கிராந்தி (Shanti Kranti). சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் மற்றும் இந்தியில் லீடாக நடித்திருந்தார். தெலுங்கில் நாகார்ஜுனா. கன்னடத்தில் படத்தை இயக்கிய வி. ரவிச்சந்திரனே நடித்திருந்தார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகை ஜூஹி சாவ்லா தான் ஹீரோயின். ஆனால், அந்த படம் ஆரம்பிக்கும் போது ஒரு பட்ஜெட் இருந்தது. கடைசியில் இரண்டு ஆண்டுகள் கால தாமதம் ஆகி படம் ரிலீஸ் ஆகும் போது வேறு ஒரு பட்ஜெட்டுக்கு சென்ற நிலையில், 1991ம் ஆண்டு வெளியான அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது. தமிழில் நாட்டுக்கு ஒரு நல்லவன் எனும் தலைப்பில் அந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

8 கோடி மட்டுமே வசூல்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த படம் சூப்பர்ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட் காரணமாகவும், தயாரிப்பு பணிகள் காரணமாகவும் காலதாமதன் ஆன நிலையில், படம் வெளியாகி ஓடினாலும் வெறும் 8 கோடி மட்டுமே வசூல் செய்து மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது.
பட்ஜெட் எவ்வளவு?: 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டிய அந்த படம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் திறமையில்லாத நிர்வாகத்தின் காரணமாக வெற்றிமாறனின் வடசென்னை 4.5 கோடியில் ஆரம்பிக்கப்பட்டு 65 கோடி ரூபாயில் முடிந்த கதையாக 4 கோடியில் ஆரம்பிக்கப்பட்டு 10 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி இருந்தது. ஆனால், 2 கோடி ரூபாய் வருமான இழப்பு தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரனை திண்டாட வைத்து விட்டது.
கடனில் தத்தளித்தார்: அந்த படத்தில் நடித்து முடித்த அந்த 3 சூப்பர்ஸ்டார் நடிகர்களும் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வேறலெவலில் முன்னேறி விட்டனர். ஆனால், அந்த படத்தை தயாரித்து இயக்கிய ரவிச்சந்திரன் அந்த கடனில் இருந்து மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த கடனை அடைக்க பல சிறு பட்ஜெட் படங்களை செய்து பின்னர் பல ஆண்டுகள் கழித்துத் தான் மீண்டு வந்தாராம்.
தயாரிப்பாளர் தலையில் துண்டு: ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகின்றன. இந்தியா முழுவதும் கணக்கு வைத்துப் பார்த்தால் அதன் எண்ணிக்கை சில ஆயிரங்களை தொடும். ஆனால், ஒட்டுமொத்தமாக வெற்றிப் பெறும் படங்கள் என்று பார்த்தால் இந்தியா முழுவதுமே 100 படம் கூட தேறாது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெளியான 255 படங்களில் 24 படங்கள் மட்டுமே லாபத்தை ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். பல படங்கள் தயாரிப்பாளர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு எனும் பழமொழியை சினிமா இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அறிந்து கொண்டு தங்கள் படைப்பை தொடரலாம்.


Click it and Unblock the Notifications











