அய்யோ தனுஷ் ஒரு பைத்தியம்.. என்ன ரஜினியின் மகள் இப்படி சொல்லிட்டாரே.. ரசிகர்கள் ஷாக்
சென்னை: தனுஷுக்கும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த வருடம்தான் சட்டப்பூர்வமாக விவாகரத்து நடந்தது. எப்படியாவது ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. ரஜினிகூட தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் தனுஷ் குடும்பத்திலும் எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க திடீரென தனுஷ் குறித்து ரஜினியின் மகள் பேசும் ஒரு வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்துக்கு மொத்தம் இரண்டு மகள்கள். இரண்டு பேருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இரண்டாவது மகள் சௌந்தர்யா கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இரண்டு பேருமே சினிமாவில் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ரஜினி தன்னுடைய முழு சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார்.

திருமணம்: மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.திருமணத்துக்கு பிறகு இருவரும் காதலோடு இருந்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை சில வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார்கள். இருந்தாலும் விவாகரத்துக்கு அப்ளை செய்யாமல் இருந்ததால் அவர்கள் கண்டிப்பாக சேர்ந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இருந்தது.
சட்டப்பூர்வமாக விவாகரத்து: ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். இருவரையும் சேர்த்து வைக்க நீதிமன்றமும் முயன்றது. ஆனால் தங்களுக்கு விவாகரத்து வேண்டுமென்பதில் இரண்டு பேருமே தீவிரமாகவும், உறுதியாகவும் இருந்ததன் காரணமாக அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கியது கோர்ட். இதன் காரணமாக ரசிகர்களும், குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இரண்டாவது திருமணம்: முதல் மகளை போலவே இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் முதலில் காதல் திருமணம்தான் நடந்தது. அந்தத் திருமண வாழ்க்கையில் ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை சௌந்தர்யாவும் முதல் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன. இருந்தாலும் விவாகரத்து என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்பதால் அதுகுறித்து ரஜினிகாந்த்தும் பெரிதாக ரியாகட் செய்துகொள்ளவில்லை.
முதல் திருமண முறிவுக்கு பிறகு சௌந்தர்யாவுக்கு நடிகர் விசாகன் மீது காதல் வந்தது. அந்தக் காதலை அவர் வீட்டில் சொல்லியவுடன் ரஜினியும், லதாவும் ஒத்துக்கொண்டு சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ரஜினியின் இந்த முடிவை பலரும் பாராட்டினார்கள். சௌந்தர்யாவுக்கு எப்படி இரண்டாவது திருமணத்தை செய்து வைத்தாரோ அதேபோல் ஐஸ்வர்யாவுக்கும் இரண்டாவது திருமணத்தை ரஜினி செய்துவைப்பார் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
தனுஷ் பற்றி: இந்நிலையில் தனுஷ் குறித்து ரஜினியின் இரண்டாவது மகள் பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது வேலையில்லா பட்டதாரி 2 படத்தை சௌந்தர்யாதான் இயக்கினார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், "வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரீ ரெக்கார்டிங்கின் ஃபைனல் டச் வேலைகள் தொடங்கிவிட்டேன். இந்த மென்ட்டலோடு இருக்கிறேன்" என்று சொல்லி தனுஷை அந்த வீடியோவில் காண்பிக்கிறார்.


Click it and Unblock the Notifications











