மகள் ஐஸ்வர்யா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார்.. அவருக்கு அந்த ஸ்தானம் கிடைக்க வேண்டும்.. மனம் உருகிய ரஜினி
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். மகளின் பிரிவு ரஜினிகாந்த்தை உச்சக்கட்ட மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஐஸ்வர்யா குறித்து மனம் திறந்து ரஜினிகாந்த் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுபவர் ரஜினிகாந்த். ஏகப்பட்ட படங்களில் நடித்து உலகளவில் ஃபேமஸாகியிருக்கும் அவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு பேர் மீதுமே ரஜினிகாந்த் உச்சக்கட்ட பாசத்தை வைத்திருப்பவர். அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பவர். அதனை அவரே பல விஷயங்களில் நிரூபித்திருக்கிறார். இரண்டு மகள்களுமே சினிமாவில்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகள்களுக்காக ரஜினிகாந்த்: தனது இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் தன்னுடைய மகள் இயக்கம் என்பதால் அதற்காக பெரியளவில் ரஜினி ஃபீல் செய்யவில்லை. அதேசமயம் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்ததற்கு முழு முதல் காரணம் சௌந்தர்யா மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் கோச்சடையான் படத்துக்கு பிறகு தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதற்கிடையே தன்னுடைய மகளுக்கு இரண்டாவது திருமணத்தையும் செய்து வைத்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: சௌந்தர்யா மீது எவ்வளவுக்கு எவ்வளவு ரஜினி பாசம் வைத்திருக்கிறாரோ அதேபோல் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா மீதும் வைத்திருக்கிறார். மூத்த மகள் தனுஷை காதலிப்பதாக தன்னிடம் சொன்னபோது முதலில் ரஜினியும், லதாவும் ஒத்துக்கொள்ளவில்லை என்றே தகவல்கள் கசிந்தன. முக்கியமாக லதாவுக்கு இஷ்டமே இல்லையாம். ஆனால் மகளின் ஆசைக்காக லதாவை சமாதானப்படுத்தி; தானும் சமாதானமாகி திருமணத்தை முன்னின்று நடத்திவைத்தார் ரஜினி.
விவாகரத்து: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அவர்களை சேர்த்து வைக்க ரஜினி எவ்வளவு முயன்றாலும் அது பலனளிக்கவில்லை. பிரிவுக்கு பிறகு தன்னுடைய மூத்த மகள் மனமுடைந்து ஒரு ஓரத்தில் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. படம் சரியாக போகாததற்கு படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதுதான் காரணம் என்று ஐஸ்வர்யாவே ஒரு பேட்டியில் வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டார்.
ரஜினியின் உருக்கம்: இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று திடீரென்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் பேசுகையில், "கடவுளிடம் பெண் குழந்தையை கேட்டால் மற்றவர்களை அவர் அனுப்பமாட்டார். அவரே நேரடியாக வந்துவிடுவார். அப்படித்தான் எனது இரண்டு மகள்கள்களான ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும். அவர்கள் இருவரும் கடவுளுக்கு சமமானவர்கள். லால் சலாம் படத்துக்காக ஐஸ்வர்யா ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். கண்டிப்பாக ஐஸ்வர்யாவுக்கு உங்கள் ஆசீர்வாதத்தோடும், கடவுளின் ஆசீர்வாதத்தோடும் கலையுலகத்தில் ஒரு ஸ்தானம் கிடைக்க வேண்டும்.அதில் நீண்ட நாட்கள் அவர் பயணிக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











