Rajinikanth - ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த செயல்.. பார்த்து கத்துக்கோங்க என கமலை விளாசும் ரசிகர்கள்..

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயலை வைத்து கமல் ஹாசனை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ரஜினிகாந்த்தும் கமல் ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள். இருவருமே பலருக்கும் இன்றுவரை ரோல்மாடலாக திகழ்கிறார்கள். குறிப்பாக புகழின் உச்சிக்கு சென்றுவிட்டாலும் தங்களது தொழிலில் இரண்டு பேருமே இன்றுவரை டெடிகேட்டடாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நெருங்கிய நண்பர்களாகவும் திகழ்கின்றனர்.

Rajinikanth Fans are Criticized Kamal Haasan Due To Rajinis Habit in Shooting Spot

போட்டிதான் ஆனாலும் நட்பு: கே.பாலசந்தரின் அறிமுகங்களான இவர்கள் ஆரம்பத்தில் ஒன்றாக பல படங்களில் இணைந்து நடித்தார்கள். ஆனால் ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் நீங்கள் தனியாக நடித்தால்தான் சரியாக இருக்கும் என கூற ரஜினிகாந்த்தும் தனியாக நடிக்க ஆரம்பித்து கமல் ஹாசனுக்கு ஈடாக வளர்ந்தார். இருந்தாலும் கமல் மீதான மரியாதையையும், நட்பையும் ரஜினி எப்போதும் குறைத்துக்கொண்டதில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி: கமல் ஹாசன் உலக நாயகன் என்று அழைக்கப்பட ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். குறிப்பாக ரஜினிகாந்த்தை தாங்கள் ரசிப்பதற்கு மிக முக்கியமான காரணம் அவரது எளிமைதான் என்கின்றனர் அவரது ரசிகர்கள். குசேலன் படத்தில் சினிமா சினிமா பாடலில், அவர் உருவம் பாரு எளிமை அந்த எளிமைதானே அவருக்கு வலிமை என்று வாலி எழுதியிருப்பார். அது அப்படியே ரஜினிக்கு பொருந்திப்போகும் என்பார்கள் ரசிகர்கள்.

பாபா ஷூட்டிங் ஸ்பாட்: இந்த சூழலில் பாபா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் செய்த செயலை வைத்து கமல் ஹாசனை ரசிகர்கள் விளாசிவருகின்றனர். அதாவது, பாபா ஷூட்டிங்கில் ரஜினிகாந்த்துக்கு டூப் போடும் கலைஞர் வந்திருக்கிறார். ரஜினிக்கு என்ன உடையோ அந்த உடைதான் டூப் ஆர்ட்டிஸ்ட்டுக்கும். ஆனால் அவருக்கான உடையை படக்குழு தயார் செய்ய மறந்துவிட்டதாம்.

ரஜினியின் செயல்: இதனால் டென்ஷனான படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கத்தி தீர்த்துவிட்டாராம். உடனே நிலைமையை புரிந்துகொண்ட ரஜினிகாந்த் தன்னுடைய சட்டையை கழற்றி அந்த டூப் ஆர்ட்டிஸ்ட்டுக்கு கொடுத்து பிறகு அதே சட்டையை தானும் அணிந்து அந்தக் காட்சியில் நடித்துக்கொடுத்தாராம். இதனை பார்த்த பலரும் எந்த நடிகரும் இப்படி செய்யமாட்டார் என்று புகழ்ந்தனராம்.

கமலுக்கு விளாசல்: இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்களில் ஒருதரப்பினர் கமல் ஹாசனை விளாச தொடங்கியிருக்கின்றனர். அதாவது சமீபத்தில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நம்மவர் 69 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ரசிகர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு டேபிளை போட்டுக்கொண்டு நின்றார். அதேபோல் கமல் ஹாசனை ரசிகர்கள் தொடுவதற்கும் அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் கமலுக்கு அருகில் நிற்பதே ரசிகர்களுக்கு முடியாமல் போனது. இதையெல்லாம் கவனித்த ரசிகர்கள், பாபா படத்தில் தன்னுடைய சட்டையையே கழற்றி தனக்காக உழைக்க வந்தவருக்கு ரஜினி கொடுத்தார். ஆனால் இங்கோ தன்னுடைய அருகில்கூட கமல் விடவில்லை. எனவே தனக்காக உழைப்பவர்களையும், தன்னை ரசிப்பவர்களையும் எப்படி நடத்த வேண்டும் என்று ரஜினிகாந்த்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் கமல் சார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்த கமல் ரசிகர்கள், சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தும் அவரது ரசிகர்களை சந்தித்தார். அப்போதும் இதே கெடுபிடிதான் இருந்தது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X