Rajinikanth: தன்னை அடிக்க தானே ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ரஜினிகாந்த்.. சூப்பர்ஸ்டாரா இப்படி செய்தது?
சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது என்பது ஒரு நாள் இரவில் நடந்த விஷயம் கிடையாது. வாய்ப்புகளுக்காக பல தயாரிப்புக் கம்பெனிகளின் கதவுகளைத் தட்டி, தனக்கான இடத்தினை தானே உருவாக்கிக் கொண்டார். அதன் காரணமாகவோ என்னவோ, ஒரு தோல்வியைச் சந்தித்தால், அதில் இருந்து எப்படி மீள வேண்டும் என அவருக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. இப்படியான சூப்பர் ஸ்டார் தன்னை அடிக்க தானே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அவரே அதனை முன் நின்று செய்துள்ளார். ஆச்சரியமாகத்தானே உள்ளது அது குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 171வது படமான கூலி படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார். சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றார்கள். இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவில் வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகின்றார். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில், கூலி படத்தில் இருந்து, சின்ன கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு அது ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது.

அதேபோல் இந்த பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் 172வது படமான ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கின்றது. படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இந்த அறிவிப்பு வீடியோ யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். இந்த அண்டுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகின்றது.
ரஜினிகாந்த்: சரி, மேலே குறிப்பிட்ட விஷயத்திற்கு வருவோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை அடிக்க தானே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 1995ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படம் பாட்ஷா. 30 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
ஆனந்த் ராஜ்: இந்தப் படத்தின் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நடிகர் ஆனந்த் ராஜ், மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பதைப் போன்ற காட்சி வரும். இந்தக் காட்சியில் தன்னை அடிப்பதற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என ஒட்டுமொத்த படக்குழுவும் பொருத்தமான நடிகரை தேடியுள்ளது. இறுதியாகத்தான் ஆனந்த் ராஜை தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக தயாரிப்பாளரிடமும், ஆனந்த் ராஜிடமும் சூப்பர் ஸ்டாரே நேரடியாக பேசியுள்ளார்.
ஸ்கெட்ச்: அப்படி பேசும்போது, ஆனந்த் ராஜ் அடித்தால்தான் சரியாக இருக்கும். வேறு ஒருவரைப் போட்டால், ரசிகர்கள் கோபம் அடைந்துவிடுவார்கள். ஆனந்த் ராஜ்தான் பொருத்தமான நபர். மேலும் இடைவேளைக்குப் பின்னர் நான் அவரை திருப்பி அடித்து விடுவேன், அதனால் எல்லாம் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். முதலில் இதைக் கேட்ட ஆனந்த் ராஜ், தான் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் ஒட்டுமொத்த படக்குழுவும் பேசி சம்மதிக்க வைத்துள்ளனர். இதனை ஆனந்த் ராஜ் பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், ஒரு சூப்பர் ஸ்டார் தன்னை அடிக்க தானே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளாரே என வியப்புடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











