ஆறு மணிக்கு மேல ரஜினிக்கு குடிக்கிற மூட் வந்துடும்.. அவ்ளோ கோபப்படுவார்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் அந்தப் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டடித்ததால் இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

'சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தைங்க சொல்லும்' என்ற பாடல் வரி அவ்வளவு உண்மை. அவர் நடிக்க வந்து ஐம்பது வருடங்கள் முடிவடையப்போகின்றன. அப்போதிருந்து இப்போதுவரைக்கும் அவரை தெரியாத தலைமுறை இல்லை. அந்த அளவுக்கு தனது ஸ்டைலாலும், நடிப்பாலும், திறமையாலும் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். 73 வயதாகும் அவர் இப்போதும் படு பிஸியாக நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியானது.

throwback stories rajinikanth coolie

கலவையான விமர்சனம்: ஜெய்பீம் இயக்குநரின் இயக்கம் என்பதன் காரணமாகவும்; அவருடன் ரஜினிகாந்த் முதன்முறையாக இணைந்திருந்ததாலும் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தாங்கள் எதிர்பார்த்தபடி படம் அமையவில்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்தனர். அதேசமயம் இந்த மாதிரியான சமூக கருத்துள்ள படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்த்தை அவர்கள் பாராட்டவும் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷுடன் கூட்டணி: வேட்டையன் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் அடுத்ததாக கூலி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இதில் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா, சௌபின் சாஹிர் என பலர் களமிறங்கியிருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் கமல் ஹாசனுக்கு விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தது போல் ரஜினிகாந்த்துக்கும் கூலி படத்தை மெகா ஹிட்டாக கொடுப்பார் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

ஜெயிலர் 2: அதேபோல் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் அவர். படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாகவும்; படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிகிறது. கூலி, ஜெயிலர் 2 படங்களை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

ஆறு மணிக்கு மேலே இப்படித்தான்: அதாவது ரஜினிகாந்த் நடித்த சிவா படத்தின் ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்திருக்கிறது. படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் மாலை ரஜினிகாந்த்தை ஸ்டில்ஸ் ரவி புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார். உடனடியாக ரஜினிகாந்த்தோ, என்ன நீங்களும் ஷாட்டுக்கு ஷாட் புகைப்படம் எடுப்பீர்களா என்று கேட்க; ரவி கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். அதனையடுத்து ரஜினியின் உதவியாளர் ஜெயராமன் ஓடிவந்து உங்களை ரஜினி சார் அழைக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

ரவி வந்தவுடன், 'என்ன சார் கோபப்பட்டீர்களா?' என்று கேட்டுவிட்டு; எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் அப்படி பேசிவிட்டேன் என்றாராம். அதனைத் தொடர்ந்து சிவா படத்தின் இயக்குநர் ரவியிடம் வந்து, 'நீங்கள் எதுவும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவருக்கு ஆறு மணிக்கு மேலே தண்ணி அடிக்கும் நியாபகம் வந்துவிடும். இன்று கொஞ்சம் லேட்டாகிவிட்டதாக டென்ஷனில் இருக்கிறார். அந்த டென்ஷனில்தான் அவர் அப்படி பேசிவிட்டார்' என்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலை ஸ்டில்ஸ் ரவி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X