Rajinikanth - ராங் ரூட்டில் சிக்கிக்கொண்ட ரஜினிகாந்த்.. அதுக்கப்புறம் நடந்தது ஆச்சரியம்..
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த் ராங் ரூட்டில் சிக்கிக்கொண்டதும் அதற்கு பிறகு நடந்ததும் தெரியவந்திருக்கிறது.
சினிமா மீது இருக்கும் ஆசையால் நடத்துநர் பணியை உதறிவிட்டு சினிமா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். பிறகு கே பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். சினிமாவில் அவர் அறிமுகமாகும்போது எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை, கறுப்பு நிறத்தவர் என பல கேலிகளையும், பல போராட்டங்களையும் சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார்: இப்படி பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 170 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் வெற்றி: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் ஜெயிலர் படம் ரிலீஸானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு காத்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த்துக்கு ஜெயிலர் படம் மெகா ஹிட்டாக அமைந்திருக்கிறது. 700 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது ராங் ரூட்டில் ரஜினி சிக்கிக்கொண்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: ரஜினியின் கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று எந்திரன். ஷங்கர் இயக்கத்தி பிரமாண்டமாக உருவான அந்தப் படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. அந்தக் கதை கமலுக்காக முதலில் எழுதப்பட்டு போட்டோ ஷூட் நடந்தாலும் ஏதோ காரணத்தால் அவர் விலக பிறகு ரஜினி உள்ளே வந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒரு நாள் மீஞ்சுர் கடற்கரை பகுதியில் நடந்திருக்கிறது.
ராங் ரூட்: ரஜினிகாந்த் எப்போதும் டெடிகேஷனான ஆள் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் காரணமாக அந்த ஷூட்டிங்கிற்கும் சரியான நேரத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று நோக்கத்தில் தனது காரில் ஏறியிருக்கிறார். ஆனால் காரின் ஓட்டுநரோ ரூட் தெரியாமல் ராங் ரூட்டில் சென்றுவிட்டாராம். சிறிது தூரம் சென்ற பிறகுதான் ராங் ரூட்டில் வந்துவிட்டோம் என ரஜினிக்கும் ஓட்டுநருக்கும் தெரிந்திருக்கிறது.
கடுப்பான ரஜினி; நடந்த ஆச்சரியம்: இதனால் கோபமடைந்த ரஜினிகாந்த் தனது ஓட்டுநரிடம் வண்டியை திருப்ப சொல்லியிருக்கிறார். ஆனால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டதாம். இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாத ரஜினி ஒருகணம் யோசித்துவிட்டு தனது தலை மற்றும் முகத்தை துண்டால் மூடிக்கொண்டு காரிலிருந்து இறங்கியிருக்கிறார்.
அந்த சமயத்தில் ஒரு போக்குவரத்து காவலர் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். அவரிடம் ரஜினி நேராக சென்று தான் ரஜினிகாந்த் என்றும் வழி மாறி வந்துவிட்டேன் ஷூட்டிங்கிற்கு லேட் ஆகிவிட்டது என்றும் கூறியிருக்கிறார். அவர் நம்ப மறுக்க; துண்டை லேசாக அவிழ்த்து முகத்தை காட்டிய பிறகு ஆச்சரியமடைந்த அந்த போக்குவரத்து காவலர் உடனடியாக ரஜினியை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு மீஞ்சுருக்கு மிக விரைவாக சென்று விட்டாராம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரஜினி என்றாலே எளிமை என்பதற்கு இந்த சம்பவம் மேலும் ஒரு உதாரணம் என கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











