Rajinikanth - தன் அப்பாவுக்காகக்கூட செய்யாததை சிவாஜிக்காக செய்த ரஜினிகாந்த்.. என்ன மனுஷன் ப்பா?..

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) தனது தந்தைக்காகக்கூட செய்யாத ஒன்றை சிவாஜிக்காக ரஜினிகாந்த் செய்திருக்கிறார்.

இந்திய சினிமாவின் ஐகானாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர் நின்றால், நடந்தால், சிரித்தால், பேசினால் என எதை செய்தாலும் வெறித்தனமாக ரசிக்கும் கூட்டம் அவருக்கு இருக்கிறது. இப்போது நடிகர்களில் 90 சதவீதம் பேர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்களாக இருப்பார்கள் இல்லை அவரை இன்ஸ்பிரேஷனாக கொண்டு சினிமாவுக்குள் வந்திருப்பார்கள். அது விஜய்யிலிருந்து சிவகார்த்திகேயன் வரை நீளும்.

Rajinikanth has done something for Sivaji that even his father did not do

செம கஷ்டம்: ரஜினிகாந்த் இப்போது வேண்டுமானால் ஒரு கிங்காக இருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய ஆரம்பகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். அவமானப்பட்டிருக்கிறார். ஆனால் வைரமுத்து ரஜினிக்காக படையப்பாவில் எழுதியது போல் வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் அப்பா தடை கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா என்று அதில் ஏறி வந்தவர்.

எளிமை: அப்படி பல கஷ்டங்களை பட்டதால்தான் இப்போதும் அவரால் எளிமையாக இருக்க முடிகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்துக்காக கலாநிதி மாறன் வழங்கிய காரை வாங்கிவிட்டு படத்தின் வெற்றி விழாவில் பேசியபோதுகூட, "இப்போதுதான் நான் பணக்காரனாக உணர்கிறேன்" என்றார். ஏனெனில் தயாரிப்பு நிறுவனத்தின் காரில் செல்வதற்குக்கூட அவர் உச்சக்கட்ட அவமானத்தை சந்தித்திருக்கிறார்.

மரியாதை: அதேபோல் ரஜினிகாந்த் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு அவரது உழைப்பு, திறமை காரணம்தான். அதேபோல் அவரிடம் இன்னொரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் தனது துறையில் இருந்த, இருக்கும் மூத்தவர்களை தவறாமல் மதிப்பது. அப்படி அவர் மதித்தவர்களில் ஒருவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அந்த மதிப்பின் வெளிப்பாடாகத்தான் படையப்பா படத்தில் நடித்ததற்காக முதன்முறையாக சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார் ரஜினிகாந்த். தற்போது தனது தந்தைக்காகக்கூட செய்யாத செயலை சிவாஜிக்காக ரஜினி செய்தது தெரியவந்திருக்கிறது.

என்ன செய்தார்?: அதாவது ஒருமுறை ரஜினிகாந்த்தை அழைத்த சிவாஜி கணேசன், 'ஏன் டா அப்பா (சிவாஜி) இறந்துட்டா என்னுடைய உடம்போடு சுடுகாடு வரைக்கும் வருவியா டா' என கேட்டாராம். அதற்கு ரஜினியோ, அய்யோ அப்பா ஏன் இப்படி கேட்குறீங்க என்று பதறினாராம். அதற்கு சிவாஜி டேய் வயசு ஆகிடுச்சு எப்ப வேணாலும் நடக்கலாம். நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு.என் உடம்போட வருவியா? ஏனா நீதான் இங்க இருக்கவே மாட்றியே.

அமெரிக்கா, லண்டன், இமயமலைனு சுத்திட்டே இருக்கியே என்று சொன்னாராம். அதற்கு ரஜினிகாந்த்தோ கண்டிப்பாக வருவேன் ப்பா என்று சொல்லியிருக்கிறார். அதனையடுத்து சில காலத்தில் சிவாஜி கணேசன் உயிரிழந்துவிட்டார். சிவாஜியிடம் சொன்னபடியே அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த ஊர்தியில் அமர்ந்து மின் மயானம் வரை சென்றார் ரஜினிகாந்த். மேலும் இப்படி ஒரு செயலை அவர் தனது தந்தைக்காகக்கூட செய்ததில்லையாம். இதனை ரஜினியே ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X