அவங்க தனியாதான் இருப்பாங்க.. நான் கஷ்டப்பட்டேன்.. ரஜினிகாந்த் ஓபனாக பேசிட்டாரே!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் அவர்; மணிரத்னத்துடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றப்போவதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. லோகேஷ் இயக்கத்தி உருவாகும் கூலி படம் தனது கரியரில் மெகா ஹிட் படமாக அமையும் என்கிற நம்பிக்கையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ரஜினி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். ஜெய்பீம் படத்தை இயக்கியவர் ஞானவேல் என்பதால் ரஜினியை வைத்து தரமான சம்பவத்தை அவர் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. முக்கியமாக முழுக்க முழுக்க ரஜினி படம் மாதிரியும் இல்லாமல்; ஞானவேல் படம் மாதிரியும் இல்லாமல் வேட்டையன் அமைந்துவிட்டதாக ரசிகர்கள் ஓபனாகவே கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

throwback stories rajinikanth coolie

கூலி ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தை முடித்திருக்கும் ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். கோலிவுட்டின் மோஸ்ட் சென்சேஷனல் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கிவருகிறார். கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தாரோ அதேபோல்தான் இந்தப் படத்தையும் ரஜினிக்கு கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் அவர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துவருகிறது.

எப்போதோ எழுதிய கதை: கூலி படத்தின் கதையை ரஜினிகாந்த்துக்காக லோகேஷ் எழுதவில்லை. அதாவது அவர் சினிமாவுக்கு வர வேண்டும் என்று முடிவெடுத்தபோது எழுதி வைத்த கதைகளில் கூலி கதையும் ஒன்று என சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இருந்தாலும் ரஜினிக்காக கதையில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்திருப்பார் என்று நம்பலாம். இந்தப் படத்தில் ரஜினியுடன் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர் கான், உபேந்திரா உள்ளிட்டோர் எல்லாம் நடிக்கிறார்கள்.

மணிரத்னத்துடன் கூட்டணி: தேவா என்ற கதாபாத்திரத்தை கூலியில் ஏற்றிருக்கிறார் ரஜினி. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த தளபதி படத்திலும் தேவா என்ற கேரக்டரைத்தான் ஏற்றிருந்தார். சூழல் இப்படி இருக்க மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்து ரஜினி ஒரு படம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. தக் லைஃப் பட வேலைகளில் இருக்கும் மணி; அதை முழுவதுமாக முடித்துவிட்டு ரஜினிகாந்த்தை நேரில் சந்திப்பார் என்றும்; அப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் பேச்சு: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "யாரெல்லாம் டாப்புக்கு செல்வார்களோ அவர்கள் எல்லாம் தனியாகத்தான் இருப்பார்கள். நானும் அப்படித்தான் இருக்கேன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜி ராவ் (சிரிக்கிறார்). கமல் ஹாசன் செய்த கேரக்டர்கள் எல்லாம் அவர் இஷ்டப்பட்டு செய்தார். நானோ கஷ்டப்பட்டு செய்தேன். ஒரு சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய பாலசந்தர் சாருக்கு எனது நன்றி.

இந்த சாதாரண ஆள் இந்த சமுதாயத்தில் மதிப்புமிக்க மனிதனாக வளர்ந்திருக்கிறேன் என்றால் அதெல்லாம் இந்த சினிமா எனக்கு போட்ட பிச்சை. இந்த சினிமா துறையில் இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறேனா என ஆச்சரியமாகத்தான் இருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X