விஜய்யுடன் நடித்த வனிதா விஜயகுமார்.. மேக்கப்புக்கு கண்ணாடி பிடித்த ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டார் வேற லெவல்

சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா; சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர். அந்தப் படத்துக்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்த அவர்; திடீரென திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை பிரச்னையை சந்திக்க; அதிலிருந்து வெளியே வந்து அடுத்தடுத்து சில திருமணங்களை செய்துகொண்டார். அவையும் அவருக்கு ஒழுங்காக செட் ஆகவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டில் பல ரோல்களை செய்திருக்கும் நடிகர் விஜயகுமார். அவரது மகள்களில் ஒருவர் வனிதா. தந்தையின் பெயரும் அவருடைய பெயரோடு சேர்ந்து வனிதா விஜயகுமார் ஆனார். விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படம்தான் வனிதாவுக்கு ஹீரோயினாக முதல் படம். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. சந்திரலேகா படத்துக்கு பிறகு தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்தான். ஆனாலும் பெரிய அளவில் அவருக்கு சினிமா கைகொடுக்கவில்லை.

Rajinikanth Held a Mirror for Vanitha Vijayakumar During Vijay s Chandralekha Shoot
Photo Credit:

திருமணத்தில் பிரச்னைகள்: திரைத்துறையில் கடுமையாக முயற்சி செய்து தனக்கான ஹீரோயின் நாற்காலியை கண்டிப்பாக அவர் தக்க வைப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த சூழலில்; திருமணம் செய்துகொண்டார். முதல் திருமணத்தில் ஒரு மகனும், இரண்டு மகள்களும் பிறந்தார்கள். மகன் விஜய் ஸ்ரீ ஹரி ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் தயாரிப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டிருப்பவர். இதற்கிடையே முதல் கணவர் ஆகாஷை பிரிந்த வனிதா; தொடர்ந்து சில திருமணங்களை செய்தார். ஆனால் அது ஒத்துவராததால் அவற்றிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

Also Read
Blast Day 2 Box Office - பிளாஸ்ட் 2வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸே பிளாஸ்ட்தான் ப்பா!
Blast Day 2 Box Office - பிளாஸ்ட் 2வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸே பிளாஸ்ட்தான் ப்பா!

இயக்குநர் வனிதா: தொடர்ந்து பெர்சனல் பிரச்னைகளால் சர்ச்சைகளில் சிக்கிய வனிதா; பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். அதற்கு பிறகு அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; மிஸஸ்&மிஸ்டர் என்ற படத்தையும் இயக்கினார். ஆனால் அதுவும் தோல்வியைத்தான் சந்தித்தது. திரைத்துறையில் எந்தப் பக்கம் காலடி வைத்தாலும் அவருக்கு கன்னி வெடி வெடிப்பதை நினைத்து கண்டிப்பாக ஃபீல் செய்வார்தான். ஆனால் அதையெல்லாம் அவர் வெளியே காட்டிக்கொள்வதில்லை.

தைரியமான பெண்: எத்தனை தோல்விகள், பிரச்னைகள், சர்ச்சைகளை சந்தித்தாலும் வனிதாவுக்கு இருக்கும் தைரியமே தனிதான். தனது மனதில் தோன்றியதை யாருக்கும், எதற்கும் அஞ்சாமல் பேசக்கூடிய குணம் படைத்தவர். அவரது அந்த குணம் ரசிகர்களில் ஒரு தரப்பினருக்கு எப்போதும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் சந்திரலேகா படத்தில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அது மீண்டும் ட்ரெண்டாகியிருக்கிறது.

வனிதா சொன்னது: அவர் அந்தப் பேட்டியில், "விஜய்க்கு ஜோடியாக நான் நடித்த சந்திரலேகா திரைப்படம்தான் எனது முதல் படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முதல் நாளில் ரஜினி கெஸ்ட்டாக வந்திருந்தார். அவர்தான் என் முதல் ஷாட்டுக்கு கிளாப் அடித்தார். அதற்கு முன்னதாக நான் என் உடைகளை சரி செய்துகொண்டு மேக்கப்பை சரி செய்வதற்காக ஸ்பாட்டில் கண்ணாடி கேட்டேன். உடனே ஒரு கண்ணாடி வந்தது. நானும் அதை பார்த்து மேக்கப்பை சரி செய்துகொண்டேன். பிறகுதான் தெரிந்தது அந்த கண்ணாடியை பிடித்திருந்தது ரஜினி. அங்கிள் நீங்கள் ஏன் இப்படி என கேட்டேன். அதற்கு அவரோ, 'அதெல்லாம் ஒன்றும் இல்லை.. உனக்கு ஓகேயா.. ஷாட் ரெடி ஆகிடுச்சு' என கூறினார். அவர் என்னிடம் ஜோவியலாக பேசுவார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X