Rajini - கமல் - ஸ்ரீப்ரியாவை பார்த்து விரக்தி.. என்ன வாழ்க்கை இது.. ரஜினி எடுத்த முடிவு என்ன தெரியுமா?

சென்னை: Rajini (ரஜினி) கமல் ஹாசன் - ஸ்ரீப்ரியாவை பார்த்து ரஜினிகாந்த் விரக்தியில் ஒரு முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். தனது நடை, உடை, பாவனை, பேசும் ஸ்டைல் என அனைத்திலும் தனித்துவமான ஸ்டைலை கொண்டிருப்பவர். எதெல்லாம் அவருக்கு மைனஸாகும் என கணிக்கப்பட்டதோ அதெல்லாம்தான் ப்ளஸ்ஸாக மாறியிருக்கிறது. எனவேதான் அவருக்கென்று சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை ரசிகர்களாக இருக்கின்றனர்.

Rajinikanth is have taken a decision in desperation after seeing Kamal Haasan - Sripriya Poster

ஆரம்ப கால கஷ்டம்: ரஜினிகாந்த் பெங்களூரில் நடத்துநராக பணியாற்றியவர். நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொண்டவர். படிக்கும்போதே ரொம்பவும் வறுமையில்தான் இருந்தார். அதனால் அவர் சிறிய அறையில் தங்கி முடிந்த அளவு வீட்டுக்கு கஷ்டம் வைக்கக்கூடாது என்று நினைத்து ரொம்பவே சிக்கனமாக இருந்தவர்.

கிடைத்த வாய்ப்பு: ஒருவழியாக பாலசந்தர் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் அறிமுகமானார். அதற்கு பிறகு சில படங்களில் வில்லனாகவும் கேரக்டர் ரோலும் செய்துகொண்டிருந்த ரஜினி பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவை பல வருடங்களாக ரூல் செய்துவருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

விரக்தியில் ரஜினிகாந்த்: மூன்று முடிச்சு படத்தில் கமிட்டாவதற்கு முன்புவரை ரஜினிகாந்த் வாய்ப்புக்காக பல காலம் காத்திருந்தார். யாரின் வழிகாட்டுதலும் இல்லை என்பதால் எங்கு போவது என்ன செய்வது என்று திணறியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் ஒருமுறை சினிமா கல்லூரிக்கு செல்லும்போது ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். அப்போது கமல் - ஸ்ரீப்ரியா நடித்த தங்கத்திலே வைரம் படத்துக்கான பேனரை வண்டியில் ஏற்றியிருக்கிறார்கள்.

புலம்பிய ரஜினி: இதனைப் பார்த்த ரஜினிகாந்த் எப்போது நமக்கெல்லாம் இப்படி ஒரு காலம் வருமோ என முணுமுணுத்தபடியே சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் ரொம்பவே மன உளைச்சலில் இருந்தாராம் ரஜினி. உடனே தனது ஆசிரியரிடம் இருந்த நடத்துநர் வேலையையும் விட்டுட்டேன். வாய்ப்பும் இங்க கிடைக்க மாட்டேங்குது. என்ன செய்வதென்று தெரியவில்லை. பேசாமல் ஊருக்கே போய்விடலாம் என்று தோன்றுகிறது என சொல்லியிருக்கிறார். உடனே அந்த ஆசிரியர் அவசரப்படாமல் பொறுமையாக இரு. எதிர்காலத்தை பற்றி நல்லவிதமாக யோசி என கூறி ஆறுதல்படுத்தியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X