ரஜினியை பார்த்ததும் துண்டை இறக்கிய விஜய்.. யப்பா எவ்வளவு மரியாதை.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம்தான் அவருக்கு கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தும், விஜய்யும் சந்தித்தபோது நடந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்தான். அதேபோல் தளபதி என்றால் விஜய்தான். இரண்டு பேருக்குமே அதிகளவில் வியாபாரம் நடக்கும்; ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் மோதல் போக்கு நிலவிவந்தது. ஏனெனில் ரஜினிகாந்த் வரிசையாக தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களை தோல்வி படங்களாக கொடுத்துவிட்டார். மேலும் வசூலிலும் அவ்வளவு பெரிதாக ஒன்றும் இல்லை என்று பலரும் ஓபனாக பேசினார்கள்.

கோதாவில் குதித்த விஜய் ரசிகர்கள்: அதனையடுத்து கோதாவில் குதித்த ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் தங்கள் தளபதி விஜய்தான் என்றும்; ரஜினிகாந்த் படங்கள் செய்யும் வசூலைவிடவும் விஜய்யின் படங்கள் அதிகம் வசூல் செய்வதாகவும் கூறினார்கள். இதன் காரணமாக விஜய் ரசிகர்களுக்கு எதிராக ரஜினியின் ரசிகர்களும் வாள் சுழற்றினார்கள். எனவே விஜய் ரசிகர்கள் Vs ரஜினி ரசிகர்கள் என்ற நிலைதான் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் இருந்தது.
ரஜினியின் கதை: ஏற்கனவே இவர்கள் மோதிக்கொண்டிருக்கும் சூழலில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை கூறினார். அதில் மறைமுகமாக அவர் விஜய்யை விமர்சித்திருக்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. அதனையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் இந்தக் கதைக்கு பதிலடி கொடுத்துவிட்டு பிறகு சமாதானமான முறையில் பேசினார். அதன் காரணமாக இரண்டு பேரின் ரசிகர்களும் கொஞ்சம் அமைதியாகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் மரியாதை: இரண்டு பேரின் ரசிகர்களுமே மோதிக்கொண்டாலும் ரஜினிகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே அபரிமிதமான மரியாதை உண்டு. முக்கியமாக ரஜினி நடித்த அண்ணாமலை படத்தில் ஒரு சீனை நடித்துக்காட்டிதான் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சினிமாவில் நடிப்பதற்கான அனுமதியை விஜய் பெற்றார். அதேபோல் பல படங்களில் ரஜினியின் ரசிகராக தன்னை காட்டிக்கொண்டவரும் விஜய். இந்தச் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது பாபா படத்தின் ஷூட்டிங்கும், பகவதி படத்தின் ஷூட்டிங்கும் ஒரு இடத்தில் அருகருகே நடந்திருக்கிறது. பாபா ஷூட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு விஜய் இயக்குநர் வெங்கடேஷிடம் தான் சென்று ரஜினியை பார்த்துவருவதாக கூறினாராம். அதற்கு இயக்குநரோ இன்னும் ஒரு சீன் இருக்கும் அதை முடித்துவிட்டு செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் விஜய் இதே செட்டில்தான் இருக்கிறார் என்பதை ரஜினியும் தெரிந்துகொண்டாராம்.
இறங்கிய துண்டு: அதனையடுத்து கொஞ்சம்கூட யோசிக்காமல் பகவதி ஷூட்டிங் நடந்த இடத்துக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டாராம். அதனை யாருமே எதிர்பார்க்கவில்லையாம். மேலும் ரஜினிகாந்த் வரும்வரை விஜய் தனது தோளில் துண்டை போட்டிருந்தாராம். அவர் வந்ததும் உடனடியாக தோளில் இருந்த துண்டை தனது கைகளில் பவ்யமாக வைத்துக்கொண்டாராம். பிறகு இரண்டு பேரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்களாம். இதனைப் பார்த்த வெங்கடேஷ் ரஜினி மீது விஜய்க்கு இவ்வளவு மரியாதையா என்று ஆச்சரியப்பட்டாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











