Ilayaraaja - மகனின் உழைப்பை திருடினாரா இளையராஜா?.. உண்மையை உடைத்த ரஜினிகாந்த்

சென்னை: Ilayaraaja (இளையராஜா) பிரபலமான பாடலுக்கு இசை இளையராஜா இல்லை என ரஜினிகாந்த் கூறும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இளையராஜா இந்திய இசையின் அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். பண்ணப்புரத்திலிருந்து கிளம்பிவந்து கோலிவுட்டுக்கென்று இருந்த இசையின் முகத்தை வெகு இயல்பாக மாற்றியவர். ஏகப்பட்ட தேசிய விருதுகளை வென்றிருக்கும் இளையராஜா இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு தரமான இசையை வழங்கிக்கொண்டிருக்கிறார்.

Rajinikanth Opens a secret about ennulle ennule song from valli movie

சர்ச்சைகளின் ராஜா: இளையராஜாவின் இசை எந்த அளவு கொண்டாடப்படுகிறதோ அதே அளவு சர்ச்சையிலும் அவர் சிக்கிக்கொள்பவர். ஒரு கச்சேரியில் என் இசையால்தானே நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள் என்றது, உனக்கு அறிவு இருப்பதை எந்த அறிவு கொண்டு சொல்கிறாய் என பத்திரிகையாளரிடம் கேட்டது, மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டது, பிறகு அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்கப்பட்டது என அந்த பட்டியல் நீளம்.

இரங்கலில்கூடவா இளையராஜா தற்பெருமை: அதேபோல் சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான மனோபால உயிரிழந்தார். அவருக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா, 'கோடம்பாக்கம் ப்ரிட்ஜில் என்னை பார்ப்பதற்கு நின்றுகொண்டிருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்' என கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஒருவருக்கு தெரிவிக்கும் இரங்கலை இப்பட் தற்பெருமை தொனியில் இளையராஜா தெரிவித்திருக்கக்கூடாது என பலர் காட்டமாக விமர்சித்தனர்.

விடுதலை இளையராஜா: அவரது இசையமைப்பில் கடைசியாக விடுதலை படம் வெளியானது. அதில் அவரது இசை பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டது. அதேசமயம் காவல் துறை அராஜகம் செய்யும் இடத்தில் தேவையில்லாமல் மாஸ் பிஜிஎம்மை இளையராஜா வைத்திருக்கிறார் என்றும், பின்னணி இசையில் சில இடங்களில் சொதப்பியிருக்கிறார் என்று சிலர் தங்களது விமர்சனத்தையும் முன்வைத்தனர். சமீபத்தில் அவரது இசையமைப்பில் மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி அமேசான் ப்ரைமில் வெளியாகியிருந்தது.

கவனம் ஈர்த்த வள்ளி: இளையராஜா இசையமைப்பில் எத்தனையோ பாடல்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளன. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்களில் ஒரு பாடல்தான் வள்ளி படத்தில் இடம்பெற்றிருக்கும் என்னுள்ளே என்னுள்ளே பாடல். அப்படித்தான் இத்தனை காலம் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அந்தப் பாடலுக்கு இசை இளையராஜா இல்லை என்பதும், அவரது மகன் கார்த்திக் ராஜாதான் இசையமைத்தார் என்பதையும் ரஜினிகாந்த் மேடையில் வைத்து போட்டு உடைத்தார்.

Rajinikanth Opens a secret about ennulle ennule song from valli movie

வள்ளிக்கு இசை கார்த்திக் ராஜா: அதாவது வள்ளி திரைப்படத்துக்கு ரஜினிகாந்த்தான் கதை எழுதியிருந்தார்.. இதனையடுத்து இளையராஜாவிடம் சென்ற ரஜினி விஷயத்தை கூறியிருக்கிறார். அதற்கு இளையராஜா நான் இசையமைக்காமல் கார்த்திக் ராஜா இசையமைத்தால் போதுமா என கேட்டிருக்கிறார். அதற்கு நான் நீங்கள் என்ன சொல்றீங்களோ அது சரிதான் என ரஜினி சொன்னாராம். அதனையடுத்து அந்தப் பாடலுக்கு கார்த்திக் ராஜா இசையமைத்தாராம்.

இதனை இளையராஜாவுக்கு சில வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் மேடைஇல் வைத்து ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் மேடையில் வைத்து அப்படி சொன்னதும் இளையராஜாவுக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை என கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை மீண்டும் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X