சூப்பரா பண்றீங்க தனுஷ்.. உடனே எழுந்த ரஜினி என்ன செய்தார் தெரியுமா?.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கிக்கொண்டிருக்கிறார் தனுஷ். கடைசியாக அவர் நடித்த படங்களில் திருச்சிற்றம்பலம் தவிர்த்து வாத்தி, ராயன் ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் அந்தப் படங்களில் அவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்போது குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து முடித்த அவர்; அடுத்ததாக தேரே இஷ்க் மெய்ன் என்ற ஹிந்தி படத்தி நடித்துவருகிறார். இந்நிலையில் தனுஷ் மற்றும் ரஜினி குறித்து ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது.
தனுஷின் ஹீரோவாக நடித்த ராயன் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. அவரே இயக்கி நடித்திருந்ததால் படத்தின் மீதான உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பல படங்களின் கலவையாக அமைந்திருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி என்பது மட்டுமின்றி பெரும் ட்ரோலையும் அப்படம் சந்தித்தது. தன்னுடைய 50ஆவது படத்தின் ரிசல்ட் இப்படி அமைந்துவிட்டதே என்று அவர் கொஞ்சம் அப்செட்டில்தான் இருந்தார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: ராயன் படத்தின் பணிகள்போது தன்னுடைய சகோதரி மகன் பவிஷை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற படத்தை இயக்கினார் தனுஷ். அதில் பவிஷுடன் அனிகா, மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். காதல் கதை ஜானரில் உருவான அப்படம் டிராகனுக்கு போட்டியாக களமிறங்கியது. ஆனால் டிராகன் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக இப்படம் தோல்வியடைந்தது. இருப்பினும் படம் ஒருதரப்பினருக்கு பிடிக்கவே செய்திருந்தது.

அடுத்த படங்கள்: தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும் தானே இயக்கிய இட்லி கடை படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இரண்டு படங்கள் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இரண்டு படங்களை முடித்த அவர் அடுத்ததாக ஆன்ந்த் எல். ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறார். மேலும் ஹாலிவுட்டில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கும் அவர்; தமிழில் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கிறார். இன்றைய தேதிக்கு அதிக படங்கள் வைத்திருக்கும் ஹீரோ என்றால் அது தனுஷ்தான் என்பது கவனிக்கத்தக்கது.
விவாகரத்து செய்த தனுஷ்: இதற்கிடையே தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரிவில் முடிந்தது. அதனையடுத்து கடந்த வருடம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டார்கள். அவர்களது பிரிவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத்தான் கொடுத்தது.
ரஜினி செய்த செயல்: ரஜினியின் மகளை பிரிந்தாலும் ரஜினி மீது தனுஷுக்கு இன்னமும் மரியாதை இருக்கவே செய்கிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது பவர் பாண்டி படத்தை இயக்கிய பிறகு ரஜினிக்கு போட்டு காண்பித்தாராம் தனுஷ். படத்தை பார்த்துவிட்டு நீங்கள் சூப்பரா டைரக்ட் செய்றீங்க தனுஷ் என பாராட்டினாராம். தொடர்ந்து தனுஷ், நான் உங்களை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லி ஒரு கதையும் சொன்னாராம். ஆனால் அந்தக் கதை ரஜினிக்கு செட் ஆகவில்லையாம். இருப்பினும் உங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்கிறேன் என்று சொல்லிதான் காலா படத்தில் நடித்தாராம்.
கை தட்டிய ரஜினிகாந்த்: அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படமும் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இடைவேளை காட்சியில் எழுந்து நின்ற ரஜினி கைத்தட்டிக்கொண்டே இந்தப் படம் ஒரு பாஷா. கண்டிப்பாக அசுரன் மெகா ஹிட்டாகும் என்று கூறினாராம். இதனை பிரபல ஆர்ஜே ஷா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











